உருகியுறைதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருகியுறைதல் (Regelation) என்பது அழுத்தம் வழங்கப்படும் போது உருகுவதும் பின்னர் அந்த அழுத்தம் குறைக்கப்படும் போது மீண்டும் உறையும் நிகழ்வு ஆகும். எடுத்துக்காட்டாக இரு பனிக்கட்டித் துண்டுகளை இணைத்து அதிக அழுத்தம் கொடுத்து பின்னர் அந்த அழுத்தத்தை விடுவிக்க அவை இரண்டும் இணைந்து ஒரே பனிக்கட்டித் துண்டாகி விடுகிறது. அழுத்தம் அதிகரிக்கும் போது, உருகுநிலை குறைவதால் பனிக்கட்டி உருகுகிறது. அழுத்தம் குறையும் போது உருகுநிலை அதிகரிப்பதால் ஒன்றாக உறைந்து விடுகிறது. இதுவே உருகி உறைதல் எனப்படுகிறது, இதை உருகி இணைதல் எனவும் கூறலாம். உருகியுறைதல் பண்பைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பரடே ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருகியுறைதல்&oldid=2130218" இலிருந்து மீள்விக்கப்பட்டது