உரிச்சொல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரிச்சொல் என்பது பல்வேறுவகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்துஞ்சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
உரிச்சொல் இருவகைப்படும்
- ஒருபொருட்குறித்த பலசொல்
- பலபொருட்குறித்த ஒருசொல்
எ.கா
ஒரு பொருள் குறித்த பல சொல்
- சாலப்பேசினான்.
- உறுபுகழ்.
- தவஉயர்ந்தன.
- நனிதின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன.
பலபொருட்குறித்த ஒருசொல்
- கடிமனை - காவல்
- கடிவாள் - கூர்மை
- கடிமிளகு - கரிப்பு
- கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும்