உரசிணைப்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Single, dry, clutch friction disc. The splined hub is attached to the disc with springs to damp chatter.
உரசிணைப்பி (அல்லது விடுபற்றி) (Clutch - கிளட்ச்) பொறியின் சில்லுகளுக்கு செலுத்தும் சக்தியை தற்காலிகமாக விடுவிக்க, மீண்டும் வழங்க பயன்படுவது. இது உராய்வு மூலம் செயல்படும் அமைப்பு. பொறியில் இருந்து வரும் கிராங்க் ஷாப்ட், நேரடியாக பற்சில்லுடன் உடன் இணைந்து இருக்காது. உரசிணைப்பி வழியாகத்தான் இணைந்து இருக்கும். திடீரென்று தடுப்பி போடுகிறோம், சில்லுக்கள் சுழல்வது நின்று விடுகின்றன. ஆனால் பொறி நிற்காது. ஏன்? அப்படி நிற்கவிலலையெனில் பொறி சேதம் ஆகிவிடும். எனவேதான் உரசிணைப்பி பயன்படுத்தப்படுகிறது.
இதில் இரண்டு சொரசொரப்பான தகடுகள் ஒன்றோடு ஒன்று அழுத்தமாக பொருந்தி இருக்கும். அதன் மூலம் ஒன்றாக இணைந்து சுழலும். அதன் பிடிமானத்தை விட அதிகம் அழுத்தம் தரப்பட்டால் ஒரு முனை விடுபட்டு சுழலாமல் நிற்கும்; மறு முனை மட்டும் சுழலும்.