உம்கொன்ரோ வெய் சிசுவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உம்கொன்ரோ வெய் சிசுவே (Umkhonto we Sizwe, தமிழில்: தேசத்தின் ஈட்டி, ஆங்கிலம்: Spear of the Nation) என்பது ஆபிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் படைப் பிரிவு ஆகும். நெல்சன் மண்டேலா இந்தப் படைப்பிரிவை தொடங்கி தலைமை தாங்கினார். இது 1953 ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தியது.

அறப் போராட்டம் கொள்கையாகவோ அல்லது வியூகமாகவோ பயன் தராதால், கொடுரூரமான எதிரியை எதிர்க்க தாம் மாற்று வழிகள் பரிசீலிப்பது அவசியம் என்று இந்த அமைப்பு தொடங்க முன் மண்டேலோ தெரிவித்து இருந்தார். இந்த அமைப்பு தொடக்கய காலத்தில் பெரும்பாலும் கேந்திர முக்கியத்துவம் வாந்த உள்கட்டமைப்புக்களைத் தகர்க்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டது. இந்த அமைப்பு தொடங்கிய சில காலத்துக்குள்ளேயே மண்டேலா சிறை வைக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்கொன்ரோ_வெய்_சிசுவே&oldid=1606784" இலிருந்து மீள்விக்கப்பட்டது