உமா மகேஸ்வரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமா மகேஸ்வரி (மஹி) (பிறப்பு: 1971), தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். 1985 இலிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார்.
[தொகு] வெளிவந்த நூல்கள்
- நட்சத்திரங்களின் நடுவே (1990) கவிதைத் தொகுதி
- வெறும் பொழுது (2002) - கவிதைத் தொகுதி
- கற்பாவை (2004) - கவிதைத் தொகுதி
- மரப்பாச்சி (2002)- சிறுகதைத் தொகுதி
- தொலைகடல் (2004) - சிறுகதைத் தொகுதி
- அரளி வனம் சிறுகதைத் தொகுதி
- யாரும் யாருடனும் இல்லை (2003) - நாவல்
[தொகு] பரிசுகள்/விருதுகள்
- கதா தேசிய விருது
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- இந்தியா டுடேயின் சிகரம் விருது
- ஏலாதி இலக்கியப் பரிசு
- இலக்கிய சிந்தனை இலக்கியப் பரிசு
- கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு