உந்தம் அழியா விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உந்தம் அழியா விதியை விளக்கும் நியூட்டனின் தொட்டில்.

தனிமைப்படுத்தப்பட்ட மூடிய தொகுதி ஒன்றின் (புற விசைகளின் தலையீடோ, புறச்சூழலோடு பரிமாற்றமோ இல்லாத ஒரு தொகுதி) மொத்த உந்தம் மாறிலியாக இருக்கும். அதாவது மோதலுக்கு முன்பிருந்த மொத்த உந்தமும் பின்பிருக்கும் மொத்த உந்தமும் சமமாக இருக்கும். இது உந்தக் காப்பு விதி (law of conservation of momentum) என அழைக்கப்படுகிறது.[1]

எடுத்துக்காட்டாக, இரண்டு துணிக்கைகள் மோதுவதாக எடுத்துக் கொள்வோம். நியூட்டனின் மூன்றாம் விதிப் படி, இரு துணிக்கைகளுக்கும் இடையே பரிமாறப்படும் விசைகள் சமனாகவும், எதிரெதிர்த் திசைகளிலும் அமைந்திருக்கும். நியூட்டனின் இரண்டாம் விதிப்படி, F1 = dp1/dt, F2 = dp2/dt, இங்கு இலக்கங்கள் 1, 2 என்பன முதலாம், இரண்டாம் துணிக்கைகளைக் குறிக்கின்றன. எனவே

அல்லது

மோதலுக்கு முன்னர் துணிக்கைகளின் வேகங்கள் u1, u2, மோதலின் பின்னர் அவற்றின் வேகங்கள் முறையே v1, v2 எனின்,

மேற்கோள்கள்[தொகு]

  1. Feynman Vol. 1, Chapter 10
  • A dictionary of science -ELBS
"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்தம்_அழியா_விதி&oldid=2300469" இலிருந்து மீள்விக்கப்பட்டது