உத்திரப் பிரதேசத்தின் சுற்றுலா மையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்திரப் பிரதேசம் இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் இது. அருகில் இந்தியத் தலைநகரான டில்லியைக் கொண்டுள்ளது. இந்தியச் சுற்றுலாவின் முக்கியமான அம்சமாகிய தாஜ்மகால் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் இம்மாநிலத்தை சுற்றுலாவில் தனி இடத்தைப் பெறுகின்றன. மதுரா, பிருந்தாவனம், கிருஷ்ண ஜென்மபூமி, அயோத்தி, ராம ஜென்மபூமி, வாரணாசி போன்ற ஆன்மீகத் தலங்களைக் கொண்டது இம்மாநிலம்.

ஆக்ரா[தொகு]

தாஜ்மகால்

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாஜ்மகால் இங்கு அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 25 லட்சம் பார்வையாளர்கள் இதைக் கண்டுகளிக்கின்றனர்.[1] இங்கு பதேபூர் சிக்ரி, அக்பர் டூம், இத்மத்-உத்-துவாலா, ஆக்ரா கோட்டை போன்றவை இங்கு அமைந்துள்ளன.

கும்பமேளா[தொகு]

கும்ப மேளா

அலகாபாத் நகரின் கங்கை நதிக்கரையில் ஒவ்வொரு வருடமும் சாதுக்கள் மகாமேளா அன்று தங்களின் ஆன்மீக பிரார்த்தனைக்காக‌ குழுமுவர். இதுவே ஒவ்வொரு 12 வது ஆண்டும் கும்ப மேளா என நடைபெறும். கும்பமேளா அன்று அதிக அளவில் துற‌விகள் குழுமுவர்.

இந்துக்களின் புனித இடங்கள்[தொகு]

பெளத்தர்களின் புனித இடங்கள்[தொகு]

முக்கிய இடங்கள்[தொகு]

பதேபூர் சிக்ரி அரண்மனை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Taj Mahal attracts a lot of visitors". Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2013-09-26.