உதுமான்
| உதுமான் | |
|---|---|
| அமீருல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தளபதி) |
|
| உதுமான் பேரரசின் உச்சம், 655. | |
| காலம் | 11 நவம்பர் 644–17 ஜூலை 656 |
| பிறப்பு | c. 579 |
| பிறந்த இடம் | தாயிஃப், அரேபியா (தற்போது, சவூதி அரேபியா) |
| இறப்பு | 17 July 656 |
| இறந்த இடம் | மதீனா, அராபியத் தீபகற்பம் (தற்போது, சவூதி அரேபியா) |
| முன் ஆட்சிசெய்தவர் | உமர் |
| பின் ஆட்சிசெய்தவர் | அலி |
| Wives | முகம்மது நபியின் மகள் ருகையா[1] முகம்மது நபியின் மகள் உம்மு குல்தூம்[1] |
| Other titles | Thu Al-Nurayn |
உதுமான் முகம்மது நபியின் மருமகனும், முஸ்லிம்களின் மூன்றாவது கலீபாவும் ஆவார். இவர் கிபி 644 முதல் கிபி 656 வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் ஈரான், வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா மற்றும் சைப்பிரசு ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இசுலாமிய இராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.
உதுமான் மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்ச சுபாவமும் கொண்டவரான இவர் பொதுவாக தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப் படை எகிப்து மற்றும் கூஃபா (ஈராக்) ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான் கிபி 656 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.