உதிரப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதிரப்பட்டி என்பது போரில் உயிர் இழந்த போர் வீரர்களின் குடும்பங்களுக்கு வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலப்பகுதியாகும். தமிழக வரலாற்றில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலங்களில் நிலம் கொடையாக கொடுக்கும் இந்த வழக்கம் இருநதுவந்துள்ளது.

பெயர்காரணம்[தொகு]

இவ்வாறு வழங்கப்பட்ட இடங்கள் இறையிலி, இரத்தகாணி, உதிரப்பட்டி, நெய்த்தோர் பட்டி, என்றும் அழைக்கப்பட்டன. பெருங்கதையில் நெய்த்தோர்பட்டிகை என்றும் குறிக்கப்படுகிறது. உதிரம் உன்ற சொல்லுக்கு இரத்தம் என்று பொருள். போரில் ரத்தம் சிந்தியவர் என்ற பொருளில் உதிரப்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

சான்று[தொகு]

திருமய்யம் அருகே தேவமலை என்ற ஊரில் உள்ள குடபோகக் கோவிலாருகில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு உதிரப்பட்டியாக வழங்கப் பட்ட நிலங்களைப் பற்றி குறிப்பிடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதிரப்பட்டி&oldid=1095548" இலிருந்து மீள்விக்கப்பட்டது