உதவி:பிற விக்கித் திட்டங்களுக்கு இணைப்பு தருதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிற விக்கித் திட்டங்களுக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளில் இருந்து இணைப்புகள் தரும் முறையைக் கீழே காணலாம்.


விக்கிபீடியா[தொகு]

எடுத்துக்காட்டுக்கு, ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள india கட்டுரைக்கு இணைப்பு தர [[:en:india|india]] என்று எழுத வேண்டும். en என்ற குறிப்புக்கு முன் உள்ள : குறியை இடாமல் விட்டால் அது இடப்பக்கப் பட்டையில் உள்ள விக்கியிடை இணைப்பாக மாறி விடும் என்பதை கவனிக்கவும். இது போல் பிற மொழிகளுக்கு இணைப்பு தர அந்தந்த மொழிகளுக்கான விக்கிமீடியா சுருக்கெழுத்துக்களை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, தெலுங்கு மொழிக்கு te, இந்தி மொழிக்கு hi.


விக்சனரி[தொகு]

தமிழ் விக்சனரியில் உள்ள தமிழ் என்ற சொல்லின் விளக்கப் பக்கத்துக்கு இணைப்பு தர [[:wikt:ta:தமிழ்|தமிழ்]] என்று எழுத வேண்டும். பிற மொழி விக்சனரிகளுக்கு அந்தந்த மொழிகளுக்கான te, hi போன்ற சுருக்கெழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும்.


விக்கிநூல்கள்[தொகு]

தமிழ் விக்கிநூல்களில் உள்ள திருக்குறள் பக்கத்துக்கு இணைப்பு தர [[:b:ta:திருக்குறள்|திருக்குறள்]] என்று எழுத வேண்டும்.