உதயநிதி ஸ்டாலின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உதயநிதி இசுட்டாலின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| உதயநிதி இசுட்டாலின் | |
|---|---|
உதயநிதி இசுட்டாலின் |
|
| பிறப்பு | உதயநிதி இசுட்டாலின் நவம்பர் 27, 1977 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், வழங்குநர் |
| பெற்றோர் |
|
| வாழ்க்கைத் துணை | கிருத்திகா உதயநிதி |
| பிள்ளைகள் | இன்பநிதி, தன்மய |
| இணையதளம் | |
| www.redgiantmovies.com | |
உதயநிதி இசுட்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.[1] இவர் இரெட் செயன்டு மூவிசுத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.[2]
உதயநிதி இசுட்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. இசுட்டாலினின் மகனும் ஆவார்.[3] இவர் கிருத்திகா உதயநிதி என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.[4]
விசய், திரிசா நடித்த குருவியே உதயநிதி இசுட்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதற்றிரைப்படமாகும்.[5] உதயநிதி இசுட்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதற்றிரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
பொருளடக்கம் |
திரைத் துறை வரலாறு [தொகு]
நடிகராக [தொகு]
| ஆண்டு | தலைப்பு | கதைமாந்தர் | இயக்குநர் | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2009 | ஆதவன் | பணியாள் உதவியாளர் | கே. எசு. இரவிக்குமார் | சிறப்புத் தோற்றம்[6] |
| 2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | சரவணன் | எம். இராசேசு | முதன்மைக் கதைமாந்தராக முதற்றிரைப்படம்[7] |
தயாரிப்பாளராக [தொகு]
| ஆண்டு | தலைப்பு | நடிகர்கள் | இயக்குநர் |
|---|---|---|---|
| 2008 | குருவி | விசய், திரிசா | தரணி |
| 2009 | ஆதவன் | சூர்யா, நயன்தாரா | கே. எசு. இரவிக்குமார் |
| 2010 | மன்மதன் அம்பு | கமல் ஆசன், திரிசா, மாதவன் | கே. எசு. இரவிக்குமார் |
| 2011 | ஏழாம் அறிவு | சூர்யா, சுருதி ஆசன் | ஏ. ஆர். முருகதாசு |
| 2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | உதயநிதி இசுட்டாலின், அன்சிக்கா மோட்வானி, சந்தானம் | எம். இராசேசு |
| 2012 | நீர் பறவைகள் | விட்டுணு விசால், பிந்து மாதவி | சீனு இராமசாமி |
வழங்குநராக [தொகு]
| ஆண்டு | தலைப்பு | நடிகர்கள் | இயக்குநர் |
|---|---|---|---|
| 2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | சிலம்பரசன், திரிசா | கௌதம் மேனன் |
| 2010 | மதராசபட்டினம் | ஆர்யா, ஏமி சாக்சன், நாசர் | ஏ. எல். விசய் |
| 2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | ஆர்யா, நயன்தாரா | எம். இராசேசு |
| 2010 | மைனா | விதார்த்து, அமலா பால் | பிரபு சாலமன் |
| 2011 | கோ | சீவா, கார்த்திக்கா நாயர், அச்மல் அமீர் | கே. வி. ஆனந்து |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ உதயநிதி இசுட்டாலின் (ஆங்கிலத்தில்)
- ↑ எங்களைப் பற்றி (ஆங்கிலத்தில்)
- ↑ தாத்தா ஆர்வம், பேரன் சிலிர்ப்பு
- ↑ இயக்குனராக அவதாரம் எடுக்கும் கிருத்திகா உதயநிதி.
- ↑ விஜய் ரெடின்னா நானும் ரெடி-உதயநிதி ஸ்டாலின்
- ↑ ஆதவனின் உதயநிதி இசுட்டாலினின் சிறப்புத் தோற்றம் (ஆங்கிலத்தில்)!
- ↑ கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்!