உதயகுமார் மரண சர்ச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதயகுமார், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்தவர். சூலை 1971-இல் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆர்வக் கோளாறால் ஒரு கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள். மேலும் பல்கலைக்கழக வளாகத்தின் சுவற்றிலும் கழுதை படம் வரைந்து, அதன் கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு கருணாநிதி எழுதினர். இது கருணாநிதியின் கவனத்திற்கு வந்தும் கண்டு கொள்ளாது மாணவர்களின் எதிர்ப்பினை மீறி, காவல்படை பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டமும் பெற்றுக் கொண்டார். [1][2]

23 சூலை 1971 அன்று மாணவர் உதயகுமார் பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காவல் துறையினர் தாக்குதலில் பலியானார் என்ற ஆதாரமற்ற வதந்தி நிலவியது. இறந்த உதயகுமாரின் பிணத்தைப் பார்த்து, இது என் மகன் இல்லை என்ற வாக்குமூலத்தை உதயகுமாரின் தந்தை பெருமாளிடமிருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றனர். காவல் துறையினர் அத்துடன் மாணவர் உதயகுமார் இறந்ததாக கூறப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது என அறிக்கை விட்டது. பல்கலைக்கழக வளாகக் குளத்தில் இறந்தது மாணவர் உதயகுமார் இல்லை எனில், இறந்த நபர் யார் என்ற விவரம் காவல்துறை விசாரணை நடத்தவில்லை. எனவே மாணவர் உதயகுமார் இறப்பின் சர்ச்சை இதுவரை தொடர்ந்து தொடர்கிறது. [3]

நீதியரசர் சந்துருவின் சுயசரிதை நூலில் உதயகுமார் மரண சர்ச்சை[தொகு]

நீதியரசர் கே. சந்துருவின் சுயசரிதை நூலில், உதயகுமார் மரண சர்ச்சையைக் குறிப்பிட்டுள்ளார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. In doctorate lies stepping stone - DMK heir to get honorary degree usually reserved for CMs
  2. Honorary Dr: More the Merrier
  3. "கருணாநிதியின் கெளரவ டாக்டர் பட்டத்தை எதிர்த்த மாணவன் உதயகுமார் இறக்க காரணமான கட்சியா கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுகிறது?". Archived from the original on 2019-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  4. நீதிபதி சந்துருவின் சுயசரிதை நூலில் உதயகுமார் மரண சர்ச்சை
  5. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்.. விலாவரியாக சொன்ன நீதிபதி சந்துரு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயகுமார்_மரண_சர்ச்சை&oldid=3777409" இலிருந்து மீள்விக்கப்பட்டது