உணா மாவட்டம்
| உணா மாவட்டம் |
|
|---|---|
|
உணாமாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம் |
|
| மாநிலம் | இமாசலப் பிரதேசம், இந்தியா |
| தலைமையகம் | உணா |
| பரப்பு | 1,549 கிமீ2 (598 ச மைல்) |
| மக்கட்தொகை | 4,47,967 (2001) |
| மக்கள் அடர்த்தி | 291 /km2 (750 /sq mi) |
| நகர்ப்புற மக்கட்தொகை | 8.8% |
| படிப்பறிவு | 81.09% |
| பாலின விகிதம் | 997 |
| சராசரி ஆண்டு மழைபொழிவு | 1253 mm |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
உணா இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். இமாவட்டத்தின் எல்லை இமாசலப் பிரதேச மாநிலத்தை பஞ்சாபின் ஹோசியர்பூர் மாவட்டத்துடன் இணைக்கிறது. உணா இம்மாவட்டத்தின் தொழில் நகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்நகரம் குல்லு, மணாலி, தர்மசாலா போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்பவர்களுக்கு ஒரு இடைவழி நகரமாக உள்ளது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி உணா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 521,057.[1] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 543வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 338 /சதுர கிலோமீட்டர் (880 /sq mi).[1] மேலும் உணா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.24 %.[1]உணா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 977 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் உணா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 87.23%.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
|
|||||