உடுக்கைப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடுக்கை

உடுக்கைப்பாட்டு என்பது, உடுக்கை என்னும் இசைக்கருவியை, இசைத்துப் பாடப்படும் கலை ஆகும். இது இசைக்கருவியால், பெயர் பெற்ற கலையாகும்.[1] உடுக்கைப்பாட்டிற்குரிய கதைப்பாடல்களாக, அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை மற்றும் அம்மன் கதைகள் ஆகியன உள்ளன. பெரும்பாலும் வண்ணார், நாவிதர் சாதி மற்றும் முதலியார், வன்னியர் சாதியை சேர்ந்த களைஞர்களும் இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலை புதுச்சேரி, கோயம்புத்தூர், ஈரோடு, உடுமலைப்பேட்டை, பழனி, திருச்சி முதலிய பகுதிகளிலும், கோவில்களிலும், பிற இடங்களிலும் நிகழ்த்தப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுக்கைப்பாட்டு&oldid=3591707" இலிருந்து மீள்விக்கப்பட்டது