உடச்சுனாயா பள்ளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உட்ச்சுனாயா பள்ளம் என்பது வைரப் படிவுகள் காணப்படும் ஒரு இரசியப் பகுதியாகும். இது ஆர்க்டிக் வட்டத்திற்கு சற்றே வெளியில் அமைந்திருக்கும் ஒரு திறந்தவெளிச் சுரங்கம். 1955-ஆம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஆழம் 600 மீட்டருக்கும் மேல். இதுவே உலகின் மூன்றாவது ஆழமான திறந்தவெளிச் சுரங்கம் ஆகும்.
இச்சுரங்கத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியான உட்ச்சுனியின் பெயரால் இச்சுரங்கம் அழைக்கப்படுகிறது.