உக்கிரப் பெருவழுதி
உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் வேங்கைமார்பன் என்னும் அண்டை நாட்டு அரசனுடைய கானப் பேரெயிலை வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளியும, சேரமான் மாரி வெண்கோவும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து ஔவயார் அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது புறநானூற்றில் உள்ளது. அதில்:
| “ |
வாழச்செய்த நல்வினை அல்லது ஆழுங்காலை புணை பிறிதில்லை |
” |
என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.
புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:
| “ |
நாகத் தன்ன பாகார் மண்டிலம்
|
” |
இவ்வரசன் காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய அகநானூற்றிலும் நற்றிணையிலும் உள்ளன