ஈழத்தமிழர் சமையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத்தமிழர் சமையல் என்பது தமிழர் சமையலில் தனித்துவம் மிக்க உணவுகளையும், சமையல் நுட்பங்களையும், கருவிகளையும், விருந்தோம்பல் பண்புகளையும் கொண்ட ஒரு சமையல் ஆகும். ஈழத்தமிழர் தாயகப்பகுதியின் சூழலியல், இலங்கையில் வாழும் பிற சமூகங்களின் உணவு வழக்கங்கள், கேரளத் தாக்கம், புகலிடச் சமையல்களின் தாக்கம் ஆகியன ஈழத்தமிழர் சமையலில் பல தனித்துவ அம்சங்களை கொண்டுவந்துள்ளன.

ஈழத்தமிழர் தாயகப்பகுதி பனை, தென்னை, மா, பிலா, வாழை, மரக்கறிகள், பல்வேறு தானியங்கள், சுவைப்பொருட்கள், கடலுணவுகள் நிறைந்தது. எனவே இயல்பாக இவை சமையலில் இடம்பெறுகின்றன. குறிப்பாக பனையில் இருந்து பெறப்படும் உணவுகள், மிகையான தேங்காய், மிளகாய்ப் பயன்பாடு, கடலுணவுகள் இங்கு அதிகம். கூழ், கொத்து ரொட்டி, இடியப்பம், பனங்காய்ப் பணியாரம், தொதல், இட்லி போன்றவை ஈழத்தமிழர் சமையலில் இடம்பெறும் நன்கு அறியப்பட்ட உணவுகள் ஆகும்.

உணவுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழத்தமிழர்_சமையல்&oldid=2977763" இலிருந்து மீள்விக்கப்பட்டது