எபிரேயம்
| எபிரேயம் עברית ‘இவ்ரித் |
||
|---|---|---|
| நாடுகள்: | இசுரேல் மற்றும் ஏனைய நாடுகள்,பிரான்சு, ஐ.இ.,ஐக்கிய அமெரிக்க நாடுகள், மேற்கு கரை | |
| பேசுபவர்கள்: | சுமார் 7 மில்லியன், (ஐக்கிய அமெரிக்க நாடுகள்: 195,375).[1] | |
| மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு மத்திய வடமேற்கு கானானிய எபிரேயம் |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | இசுரேல் | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | எபிரேய மொழி உயர்கல்விக்கழகம் (הָאָקָדֶמְיָה לַלָּשׁוֹן הָעִבְרִית, HaAkademya laLashon ha'Ivrit) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | he | |
| ISO 639-2: | heb | |
| ISO/FDIS 639-3: | heb | |
எபிரேயம் (עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இது இசுரேல் நாட்டின் -அரபுடன் சேர்த்து- ஆட்சி மொழியாகும். இசுரேலின் பெரும்பான்மையான மக்களான யூதர்களால் பேசப்படுகிறது. ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு (en:Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடா (Eliezer Ben-Yehuda) வின் பெரு முயற்சியால் மீண்டும் வழக்குக்கு வந்துள்ளது.
குறிப்பு [தொகு]
- ↑ United States Census 2000 PHC-T-37. Ability to Speak English by Language Spoken at Home: 2000. Table 1a.
வெளி இணைப்புகள் [தொகு]
செமிடிக் மொழிகளின் வகை [தொகு]
குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.