ஈகில்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஈகில்சு | |
|---|---|
“லாங் ரோட் அவுட் ஆவ் ஈடன்” சுற்றின் போது (இ-வ): கிளென் பிரை, டான் என்லி, ஜோ வால்சு, திமொதி சிமிட்.
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பிடம் | லாசு ஏஞ்சலசு, கலிபோர்னியா. |
| இசை வகை(கள்) | ராக், ஹாட் ராக், கிராம ராக், |
| இசைத்துறையில் | 1971–1980 1994–தற்போது வரையில் |
| வலைத்தளம் | www.eaglesband.com |
| அங்கத்தவர்கள் | |
| கிளென் பிரை டான் என்லி ஜோ வால்சு திமொதி சிமிட் |
|
| முன்னாள் அங்கத்தவர்கள் | |
| டான் பெல்டர் ரேண்டி மெய்சுனர் பெர்னீ லீடன் |
|
ஈகில்சு என்ற அமெரிக்க “கிராம ராக் இசை”க் குழு கிளென் பிரை, டான் என்லி, பெர்னீ லீடன், ரேண்டி மெய்சுனர் ஆகியோரால் 1971-இல் உருவாக்கப்பட்டது. தரப்பட்டியலில் ஐந்து முதலிட தனிப்பாடல்களையும் ஆறு பாடல் தொகுப்புகளையும் கொடுத்துள்ள இக்குழு 1970-களின் மிகப்பிரபலமான இசைக்குழுக்களுள் ஒன்றாக இருந்தது. ஈகில்சு இசையமைத்த ஓட்டல் கலிபோர்னியா என்ற பாடல் தொகுப்பு ரோலிங் இசுட்டோன் என்ற (இசைக்கான) பத்திரிகையின் “இதுவரை வெளியான தொகுப்புகளில் முதல் 500 மிகச்சிறந்த இசைத்தொகுப்பு” என்ற தரவரிசையில் 37-வது இடத்தைப் பிடித்தது. ஈகில்சின் “தேயர் கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்” என்ற தொகுப்பு அமெரிக்காவில் மட்டும் 29 மில்லியன் படிகளும் உலகளவில் மொத்தம் 42 மில்லியன் படிகளும் விற்று சாதனை படைத்தது. 1980-இல் இக்குழு பிரிந்து, மீண்டும் 1994-இல் ஒன்றிணைந்தது.