இஸநமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
天瓊を以て滄海を探るの図.வலது புறத்தில் இஸநாகி, இடது புறத்தில் இஸநாமி

ஜப்பானிய புராணக்கதைகளில், இஸநமி Izanami (イザナミ? 伊弉冉尊 or 伊邪那美命, பொருள் "அழைப்பவள்") படைப்பு மற்றும் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் இஸநகியின் மனைவி. இவரை இஸநமி-நொ-மிக்கொட்டொ அல்லது இஸநமி-நொ-கமி எனவும் அழைப்பர்.

படைப்பின் தெய்வம்[தொகு]

பிரபஞ்சத்தின் மூத்த தெய்வங்கள், இஸநகி மற்றும் இஸநமி என்ற இரண்டு இளம் கடவுள்களை படைத்தனர். அக்காலக்கட்டத்தில் பூமி நீரினால் மட்டும் நிரம்பிருந்தது. எனவே இவர்கள் இருவரும் நிலத்தை உருவாக்க பூமிக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் பணியில் உதவுதற்காக அமெ-நொ-நுபொக்கொ என்ற ஈட்டியை அவர்களுக்கு அளித்தனர். இவர்கள் இருவரும் சொர்கத்தையும் பூமியையும் இணைக்கும் பாலமான அமெ-நொ-உக்கிஹஷி என்ற மிதக்கும் பாலத்தின் மூலம் பூமியை அடைந்தனர். பாலத்தில் இருந்து கொண்டே தங்களுடைய ஈட்டியினால் கீழே உள்ள கடலை கடந்தனர். ஈட்டியில் இருந்த கீழே விழுந்த உப்பு நீர்த்துளிகளினால் ஒனோகோரோஷிமா என்ற தீவு உருவாகியது. பாலத்தில் இருந்து இறங்கியவுடன் இருவரும் அத்தீவில் தங்களுக்கு ஓர் இல்லத்தை அமைத்துக்கொண்டனர்.

இருவரும் இணைய வேண்டி அமெ-நொ-மிஹாஷிரா என்ற சொர்க்கத்தின் தூணை அமைத்தனர். அதனை சுற்றி யஹிரோ-டொனோ என்ற மாளிகையையும் அமைத்தனர். இஸநமியும் இஸ்நகியும் தூணை எதிர் திசைகளில் சுற்றி வந்தனர். இருவரும் சந்தித்த போது, இஸநமியே முதலில் பேசினாள். இஸநகிக்கு இது சரியெனப்படவில்லை. எனினும் இருவரும் இணைந்தனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஹிருக்கோ மற்றும் அவஷிமா என்ற இரண்டு குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் குறைபாடுள்ளவையாதலால் அவை தெய்வங்களாக கருதப்படவில்லை.

இஸநகியும் இஸநமியும் அக்குழந்தைகளை ஒரு படகில் ஏற்றி கடலில் விட்டு விட்டனர். பிறகு மற்ற தெய்வங்களிடம் தாங்கள் செய்த தவறை குறித்து வினவினர். அப்போது தான் இணையும் போது இஸநகி முதலில் பேச வேண்டும் என அறிந்து கொண்டனர். பின்னர் மீண்டும் தூணைச்சுற்றி இணைய முற்பட்டனர், இருவரும் சந்தித்த வேளையில் இஸநகி முதன் முதலில் பேசினார். இதனால் இவர்களுக்கு ஜப்பானின் எட்டு முக்கியமான தீவுகள் அல்லது ஓயஷிமா தோன்றின

கவனிக்க ஹொக்கைடோ, சிஷிமா, மற்றும் ஒகிநவா போன்ற முக்கியமாக தீவுகள் ஜப்பானாக பழங்காலத்தில் அறியப்படவில்லை.

மேலும் அவர்கள் இன்னும் ஆறு தீவுகளையும் பல்வேறு தெய்வங்களையும் பெற்றெடுத்தனர். இஸநமி நெருப்பின் தெய்வமான ககுட்ஸுசியை பெற்றெடுத்தவுடன் மரணம் அடைந்தார். இவள் உடல் ஹிபா மலையில் அடக்கம் செய்யப்பட்டது. இவளுடைய இறப்பால் மிகுந்த ஆத்திரமுற்ற இஸ்நகி ககுட்ஸுசியை பல துண்டுகளாக வெட்டு கொன்றார். அந்த துண்டுகளில் இருந்து பலவேறு தெய்வங்கள் தோன்றின.

இறப்பின் தெய்வம்[தொகு]

தன் மனைவியின் பிரிவை தாங்க இயலாத இஸநகி இறந்தவர்களின் உலகமான யொமிக்குச் சென்றார். முதலில் பல நிழல்கள் மறைத்திருந்ததால் இஸநாமியை காண இயலவில்லை. எனினும் பிறகு இஸநமியை கண்டுகொண்டார். தன்னுடன் வருமாறு தன் மனைவியை கேட்டுக்கொண்டார். எனினும் இஸநகி மிகவும் தாமதமாக வந்துவிட்டதாக இஸநாமி தெரிவித்தாள். இஸநமி ஏற்கனவே யொமி உலகத்தின் உணவை உட்கொண்டுவிட்டதால் அந்த உலகத்தில் ஒருவராக மாறிவிட்டார். எனவே மறுபடியும் பூமிக்கு திரும்ப இயலாமல் இருந்தது.

இதைக்கேள்விப்பட்டு இஸநகி அதிர்ச்சியடைந்த போதிலும், அவர் இஸநாமியை மீட்டுச்செல்வதில் உறுதியாக இருந்தார். இஸநமி உறங்கிய வேளையில், தன்னுடைய நீண்ட கூந்தலை வாரி முடித்து, அதில் தீ வைத்து அதையே விளக்காக பயன்படுத்தினார். இருண்ட உலகமான யொமியில் ஒளி புகுந்தவுடன், தன்னுடைய அழகான மனைவி இஸநமியின் கோர உருவத்தை கண்டு அலறினார். அவளுடைய உடல் அழுகிய நிலையில் புழுக்களோடு இருந்தது.

தனது பயத்தை கட்டுப்படுத்த இயலாமல் அவளை விட்டு நீங்கி, மீண்டும் பூமிக்கு திரும்ப நினைத்து அவ்விடத்தை விட்டு நீங்கினார். இதனால் வெறுப்படைந்த இஸநமி கோபத்துடன் இஸநகியை பின் தொடர்ந்தார். யொமி உலகத்தின் ஷிகொமேக்களை இசநகியை திரும்ப கொண்டுவருமாறு இஸநமி பணித்தார்.


இஸநகி வேகமாக யொமி உலகத்தின் வாயிலை அடைந்தார். யொமொட்ஸுஹிரஸக்கா என்றழைக்கப்படும் யொமி உலகத்தின் வாயிலை பெரிய பாறையின் மூலம் மூடினார். பாறையின் பின்னே இருக்கின்ற இஸநமி, தன்னை விட்டு பிரிந்தால் ஆயிரம் உயிர்களை உலகத்தில் இருந்து பறித்து விடுவதாக கூறினார். இதற்கு இஸநகி தான் 1500 பேருக்கு உயிரைத் தருவேன் என கூறினார்.

இந்த நிகழ்வில் இருந்து, இஸநாகி இறப்பின் தெய்வமாக அறியப்பட்டார்.

Amaterasu cave crop.jpg

ஜப்பான் தொன்மவியல்

தொன்ம நூல்கள் மற்றும் கதைகள்:
கொஜிக்கி | நிஹொன் ஷொக்கி | ஒட்டொகிஸோஷி | யொட்ஸுய கைடன்
உரஷிம டரோ | கின்டரோ | மொமொடரோ | டமமொ-நொ-மயெ
தெய்வங்கள்:
இஸநமி | இஸநகி | அமெட்டெரஸு
சுசனொ-ஒ | அம-நொ-உஸுமெ | இனரி
தெய்வங்களின் பட்டியல் | கமி | ஏழு அதிர்ஷ்ட தேவதைகள்
மாய உயிரணங்கள்:
ஒனி | கப்பா | டெங்கு | டனுக்கி | கிட்ஸுனெ | யோக்கை | டிராகன்
புனித இடங்கள்:
ஹுவெயி மலை | 'ஃபுஜி மலை | இஸுமொ | ரியூகூ-ஜோ | டக்கமகஹரா | யொமி

மதம் | புனித பொருட்கள் | விலங்குகள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=இஸநமி&oldid=1348747" இருந்து மீள்விக்கப்பட்டது