இழைய அழுகல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Gangrene வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| Dry gangrene of the 1st to 4th toes of the right foot in a man with diabetes. | |
| ICD-10 | R02., I70.2, E10.2, I73.9 |
| ICD-9 | 040.0, 785.4 |
| DiseasesDB | 19273 |
| பாடத் தலைப்பு | D005734 |
இழைய அழுகல் என்பது இழையநசிவு மூலம் அதிகளவிலான உடல் இழையங்கள் இறப்புக்குள்ளாகும்போது, இறப்பு ஏற்படக்கூடிய அளவிற்கு, உடல் பகுதியானது தீவிரமாக பாதிக்கப்படும் நிலையாகும்[1][2]. ஏதாவது உடல் காயங்கள் ஏற்பட்டதனாலோ, அல்லது தொற்றுநோய்களின் தாக்கத்தினாலோ, அல்லது குறிப்பிடக்கூடிய ஒரு நாட்பட்ட நோய்த் தாக்கத்தினால், குருதிச் சுற்றோட்டத்தில் பாதிப்பு ஏற்படும்போதோ இத்தகைய இழைய அழுகல் ஏற்படலாம்[2]. இழையங்களுக்கான குருதி வழங்கலில் ஏற்படும் தடையும், அதனால் உயிரணுக்களில் ஏற்படும் தொடர் இறப்புமே, இழைய அழுகலுக்கான முதன்மையான காரணியாக அறியப்படுகின்றது[3]. நீரிழிவு நோய், நீண்ட கால புகைத்தல் போன்ற நிலைகள் இவ்வகை இழைய அழுகலை அதிகரிக்கவல்ல சூழ் இடர் காரணிகளாக உள்ளன [2][3].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Porth, Carol (2007). Essentials of pathophysiology. Lippincott Williams & Wilkins. p. 41. ISBN 9780781770873. http://books.google.com/?id=57RQC-3OPtUC&pg=PT59&dq=necrosis+gangrene&q=necrosis%20gangrene. Retrieved 2010-06-15.
- ↑ 2.0 2.1 2.2 "Gangrene – Introduction". NHS Health A–Z. NHS. பார்த்த நாள் 2010-06-15.
- ↑ 3.0 3.1 "Gangrene – Causes". NHS Health A–Z. National Health Service (England). பார்த்த நாள் 2010-06-15.