தமிழர் பருவ காலங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இளவேனில்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழர்கள் ஓர் ஆண்டை கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர்.
- கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசியை உள்ளடக்கியது.
- கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகையை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.
- முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தையை உள்ளடக்கியது.
- பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனியை உள்ளடக்கியது.
- இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசியை உள்ளடக்கியது.
- முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.