இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசர் ஆண்ட்ரூ
யார்க் கோமகன் (மேலும்)
2007இல் யார்க் கோமகன்
பிறப்பு19 பெப்ரவரி 1960 (1960-02-19) (அகவை 64)
பக்கிங்ஹாம் அரண்மனை, லண்டன்
துணைவர்சாரா, யார்க் கோமகள்
(மணம். 1986, முறிவு. 1996)
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசி யார்க்கின் பேட்ரைசு
இளவரசி யார்க்கின் யூசெனி
பெயர்கள்
ஆண்ட்ரூ ஆல்பர்ட் கிறிஸ்டியன் எட்வர்டு[1]
மரபுவிண்ட்சர் மாளிகை
தந்தைஎடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்
தாய்எலிசபெத் II
மதம்இங்கிலாந்து திருச்சபை
இசுக்காட்லாந்து திருச்சபை

இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன் (Prince Andrew, Duke of York, பிறப்பு: ஆண்ட்ரூ ஆல்பர்ட் கிறிஸ்டியன் எட்வர்ட்; பெப்ரவரி 19, 1960), ஐக்கிய இராச்சியத்தின் முடியரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் பிலிப்பின் இரண்டாம் மகனும் மூன்றாவது குழந்தையுமாவார். பிறக்கும்போது ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய மண்டலம் எனப்படும் ஏழு சுதந்திர நாடுகளுக்கு தலைமையேற்க தகுதிபெற்ற அரசமரபினர்களில் இரண்டாவதாக இருந்தார். தற்போது மூத்த சகோதரருக்கு இரண்டு மக்கள் பிறந்துள்ளநிலையில் மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைந்தபிறகு 16 நாடுகளின் அரசராக தகுதியுடைய நான்காவது நபராக உள்ளார்.

வேந்திய கடற்படையில் உலங்கு வானூர்தி ஓட்டுநராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ள ஆண்ட்ரூ தற்போது கமாண்டராக பணிநிலை வகிக்கிறார்; ரியர் அட்மிரல் என்ற கௌரவ பணிநிலை வழங்கப்பட்டுள்ளது. 1986இல் இளவரசர் ஆண்ட்ரூ சாரா பெர்குசனை திருமணம் புரிந்தார்; இவர்களது திருமணம், பின்னர் பிரிந்து வாழ்தல் மற்றும் 1996இல் மணமுறிவு ஆகியன பிரித்தானிய ஊடகங்களில் மிகவும் இடம்பிடித்திருந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. The 1960 Order-in-Council giving the surname Mountbatten-Windsor to the male-line descendants of The Duke of Edinburgh and Elizabeth II specifically refers only to such descendants without a royal title, as those with it generally have no need for a surname. Despite this, the Duke of York (like his sister) entered with this surname in the marriage register.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Prince Andrew, Duke of York
என்பதில் ஊடகங்கள் உள்ளன.