இளமையின் கீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளமையின் கீதம்
இயக்கம்ஹூவாய்காய் சென், வெய் சுவெய்
மூலக்கதைஇளமையின் கீதம் யாங் மோ
நடிப்புசுவன் சுவாங்கெ
யீ சின்
்பாங் ஷிய
ட்சிஹ் யுயே சாவ்
வெளியீடு1959 (1959)
ஓட்டம்158 minutes
நாடுசீனா
மொழிசீனம்

சீனாவில் 1930களின் போது நடந்த உள்நாட்டு போராட்டங்கள், வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு மத்தியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் போராட்டங்களில் பங்கெடுப்பது பற்றிய யாங் மோ எழுதிய புதினத்தின் இளமையின் கீதம் அடிப்படையில் சீன மக்கள் குடியரசின் 10ம் ஆண்டு நிறைவை ஒட்டி திரைப்படமாக எடுக்கபட்டது இந்தப் படத்திற்கு திரைக்கதை புதினத்தின் ஆசிரியர் யாங்மோ எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உலவ விட்டிருக்கிறார்கள்.

கதை[தொகு]

டாவோசிங்கின் தந்தை திவால் ஆன பிறகு அவளது சிற்றன்னை அவளை கோமிங்டாங் கட்சியைச் சேர்ந்த பணிபுரியும் ஒருவருக்கு மணமுடிக்க முயற்சி செய்கிறார். அதிலிருந்து தப்பித்து வேறு ஊருக்கு வரும் டாவோசிங் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் போது யுயுவாங் என்ற பல்கலைக்கழக மாணவன் அவளை காப்பாற்றுகிறான். .

யுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள். அந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது போர் தொடுக்கிறது. டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று மாணவர்களுக்கு பாடமாக நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று கண்டனம் வருகிறது. நகரத்துக்குச் சென்று யுயுவாங்குடன் ஒன்று சேர்கிறாள்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான லுஷூ என்பவர் மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள்.

டாவொசிங்கின் கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.

சிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். டாவோசிங் அங்கிருந்து பெய்ஜிங் போகும் போது பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். இறுதியில் பல போராட்டங்களுக்குப் பிறகு, சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.

பாத்திரங்கள்[தொகு]

  • ட்சுன் சுவாங் கெ ... லீ ட்சிஹ் திங்
  • யீ சின் ... லின் ஹொங்
  • ்பாங் ஷிய
  • ட்சிஹ் யுசே சாவ்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமையின்_கீதம்&oldid=3672010" இலிருந்து மீள்விக்கப்பட்டது