இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
| எழுத்துப்பிழைகள் கொண்ட பக்கம்.
தமிழில் தட்டச்சு செய்யப்படும் போதோ அல்லது சரியான எழுத்துக்கள் தெரியாமலோ இக்கட்டுரையில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். இக்கட்டுரையில் உள்ள சில எழுத்துப் பிழைகளை களைந்து கட்டுரையை மேம்படுத்த நீங்கள் உதவலாம். செம்மைப்படுத்திய பின் இச்செய்தியை நீக்கி விடவும். |
| இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு | |
| சுருக்கம் | UGC |
|---|---|
| உருவாக்கம் | டிசம்பர் 22, 1978 |
| நோக்கம் | பல்கலைக்கழக கல்வி முறைமையை திட்டமிடலும், ஒழுங்கமைத்தலும் .கல்வி நிறுவனங்களின் கல்வி தரத்தை உயர் தரத்தில் பேணுதலும். |
| தலைமையகம் | கொழும்பு |
| அமைவிடம் | இலங்கை |
| அதிகாரபூர்வ மொழிகள் | சிங்களம், தமிழ், ஆங்கிலம் |
| Chairman | பேராசிரியர்.காமினி சமரநாயக்க [1] |
| Main organ | ஆணைக்குழு அங்கத்தவர்கள் |
| Affiliations | இலங்கை அரசாங்கம் |
| பணியாளர்கள் | 200 மேல் |
| இணையத்தளம் | http://www.ugc.ac.lk/ |
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது இலங்கையில் 22ஆம் திகதி மார்கழி மாதம் 1978ஆம் ஆண்டில் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இலங்கையில் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் விதிக்கப்பட்ட வரையறைக்குள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு முறைமை இயங்கி வருகின்றது. பல்கலைக்கழகங்களில் பட்டப்பயில் கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்கான மாணவர்களை தெரிவு செய்வது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய பணியாகும். இல: 20 வார்டு இடத்தில் இதன் பணியகம் அமைந்துள்ளது. கல்விக்கான அரச பொது நிதி ஒதுக்கீடுகளை உயர் கல்வி நிறுவனங்களுக்கு பங்கிடுவதும், உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களை குறித்த முறைமைக்கு ஏற்ப வழி நடத்துவதுமே இதன் பணியாகும்.
பொருளடக்கம் |
[தொகு] தூர நோக்கு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தூர நோக்கு உள்நாட்டு உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி முறைமையின் உயர்தரத்தை உறுதி படுத்தலும், சர்வதேச கல்வி தரத்திற்கு அமைவாக உருவாகலும்.
[தொகு] இலட்சிய நோக்கம்
இலங்கையின் உயர்கல்வித் துறையில் பாரிய அளவில் அபிவிருத்தியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குதலும் உயர் கல்வி நிறுவனங்களூடாக தகுதியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணி மேம்பாடும் இதன் நோக்கமாகும்.
[தொகு] பணிகள்
ஆணைக்குழுவின் பிரதான கருமங்கள் ;
- உயர் கல்விக்கான வளங்கள் மற்றும் நிதியை உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்குதல்.
- பல்கலைக்கழக கல்வி முறைகளை திட்டமிடலும் ,மேற்பார்வை செய்தலும்
- கல்வி தராதரங்களை மேற்பார்வை செய்தல்
- உயர் கல்வி நிறுவனங்களை முகாமை செய்தல்
- பட்டபயில் கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்கான மாணவர்களை தெரிவு செய்வது
[தொகு] ஆணைக்குழு அங்கத்தவர்கள்
இதன் அங்கத்தவர்கள் தலைவரால் நியமிக்கபடுவர்:
- பேரா. S V D G காமினி சமரநாயக்க -தலைவர்
- பேரா. M T M ஜிப்ரி - உப தலைவர்
- பேரா. கார்லோ பொன்சேகா - ஆணைகுழு அங்கத்தவர்
- பேரா. ரோகன் ராஜபக்ச - ஆணைகுழு அங்கத்தவர்
- பேரா. S K சிற்றம்பலம் - ஆணைகுழு அங்கத்தவர்
- பேரா. S B S அபயகோன் - ஆணைகுழு அங்கத்தவர்
- வித்தியஜோதி பேரா. H ஜனக தே சில்வா - ஆணைகுழு அங்கத்தவர்
[தொகு] அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்
[தொகு] தேசிய பல்கலைக்கழகங்கள்
- கொழும்பு பல்கலைக்கழகம்
- University of Colombo School of Computing
- Institute of Indigenous Medicine
- Institute of Worker's Education
- e National Institute of Library and Information Scienc
- National Center for Advanced Studies in Humanities & Social Sciences [2]
- Institute of Biochemistry, Molecular Biology and Biotechnology (IBMBB)[3]
- Postgraduate Institute of Medicine, Colombo [4]
- Sri Palee Campus
- பேராதனைப் பல்கலைக் கழகம்
- ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம்[7]
- களனிப் பல்கலைக்கழகம்
- Gampaha Wickramaracchi Institute of Ayurvedic Medicine
- Postgraduate Institute of Pali & Buddhist Studies, Colombo [8]
- மொறட்டுவப் பல்கலைக்கழகம்
- Institute of Technology, Moratuwa [9]
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- Vavuniya Campus
- ருகுண பல்கலைக் கழகம்
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
- கிழக்குப் பல்கலைக்கழகம்
- Swamy Vipulananda Institute of Aesthetic Studies
- Trincomalee Campus
- ரஜரட பல்கலைக்கழகம்
- சபரகமுவ பல்கலைக்கழகம்[10]
- ஊவா வெல்லசை பல்கலைக்கழகம்
- வயம்ப பல்கலைக்கழகம் [11]
- University of the Visual & Performing Arts
- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
- National Center for Advanced Studies
[தொகு] உயர் கல்வி நிறுவகங்கள்
- Graduate & Undergraduate Degrees
- Only Undergraduate Degrees
- Institute of Technological Studies
- Institute of Surveying and Mapping
- Aquinas College of Higher Studies
- National Institute of Social Development
- National Institute of Business Management[2]