இலங்கை சட்டக் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இலங்கை சட்டக் கல்லூரி | |
|---|---|
|
|
|
| நிறுவல்: | 1874 |
| வகை: | பொது |
| முதல்வர்: | டபிள்யூ. டி. றொட்ரிகோ |
| அமைவிடம்: | கொழும்பு, இலங்கை |
| இணையத்தளம்: | [1] |
இலங்கை சட்டக் கல்லூரி (Sri Lanka Law College) 1874 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டக் கல்வித் தேவைப்பாடுகளுக்காக இலங்கை சட்டத்தரணி மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது. இக்கல்லூரி கொழும்பில் அல்ஸ்டோர்ப் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
சட்டக் கல்வி [தொகு]
சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்துவத்துனைப் பெறுவதற்கு சட்டக்கல்லூரியினால் நடத்தப்படும் பரீட்சையில் சட்டமாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும்.
இங்கு படித்து புகழ் பெற்றவர்கள் [தொகு]
- ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி.
- மஹிந்த ராஜபக்ச - இலங்கையின் தற்போதய நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியும் முன்னாள் பிரதமருமாவர்.
- காமினி திசாநாயக்கா - முன்னாள் அமைச்சரவை அமைச்சர்.
- எம். எச். எம். அஷ்ரப் - முன்னாள் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்.
- நீதியரசர் பரிந்த ரன்சிங்க - இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்.
- நீதியரசர் கிறிஸ்தோபர் வீரமந்திரி
- நீதியரசர் சரத் என். சில்வா - இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்.
பங்காளர் பல்கலைக்கழகங்கள் [தொகு]
# வேல்ஸ் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்