இலங்கையில் 1818ம் ஆண்டு கலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

1818ம் ஆண்டு கலகம் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியத்துவமான கலகமாக கொள்ளப்படுகின்றது. இந்தக்கலகத்தை பிரித்தானியப் படையினர் அடக்கினாலும்கூட, இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிலையாகக் கொள்ளப்படுகின்றது. இக்கலகம் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதல் கலகமாகவும் கொள்ளப்படுகிறது.

பொருளடக்கம்

[தொகு] 1818ம் ஆண்டு கலகத்துக்கான காரணம்.

  • கண்டி மன்னனை நீக்க, கண்டி மக்கள் பிரித்தானியருக்கு ஆதரவு வழங்கினாலும், அவர்களின் ஆட்சி தொடர்வதை விரும்பாமை
  • கண்டிய மரபுகளில் பிரித்தானியர் கவனம் செலுத்தாமை
  • கண்டி மக்கள் மன்னாராட்சியை விரும்பியமை. (சடங்குகள், சமய அனுஷ்டானங்களுக்கு மன்னன் சமுகமளிப்பதை கௌரவமாக எண்ணியமை)
  • பிரித்தானிய உத்தியோகத்தர் பிரதானிகளின் செல்வாக்கினைப் பறித்தல்

[தொகு] உடனடிக் காரணம்

ஹஜ்ஜி மரைக்காயர் எனும் முஸ்லிமை வெல்லஸ்ஸ பகுதிக்கு அதிகாரியாக நியமித்தமை, கலகத்திற்கான உடனடிக்காரணமாக அமைந்தது.

[தொகு] 1818 ஆண்டு கலகப் போக்கு

  • இக்கலகம் 1817 செப்டம்பரில் ஊவாவில் ஆரம்பமானது
  • 1818 ஜனவரியில் கலகம் வெல்லஸ்ஸவிற்குப் பரவியது
  • பருவமழை காரணமாகவும், போக்குவரத்து வசதியின்மை காரணமாகவும் படைகளை உடனடியாக அனுப்பிக் கொள்ள பிரித்தானியருக்கு முடியவில்லை.
  • கலகக்காரர்களுக்கு கண்டி, தும்பறை, ஹேவாஹெட்ட, சப்பிரகமுவ திசாவைகளின் ஒத்துழைப்பு கிடைத்தமை
  • கண்டிக்கலகம் தேசிய நாட்டினவாதத்தின் எழுச்சியாக மாறியமை

[தொகு] கலகம் தோல்வியடைந்தமைக்கான காரணிகள்

  • கலகம் ஒழுங்கற்றதாக இடம்பெற்றமை
  • பிரித்தானியரால் கொடுமையான முறையில் அடக்கப்பட்டமை
  • கலகக்காரர்களிடம் சிறந்த தலைமைத்துவம் இல்லாமை
  • சில பிக்குகளினால் கடத்தப்பட்ட புனித தந்தத்தை பிரித்தானியர் மீட்டெடுத்தமை (தந்ததாது எவர் கையில் இருக்கிறதோ அவரே ஆளத்தக்கவர் என சிங்கள மக்கள் நம்பியமை)
  • பிரதானிகளின் ஒரு பகுதியினர் பிரித்தானியருக்குத் தொடர்ந்தும் ஆதரவு அளித்தமை (உதாரணமாக: மொல்லிகொட)

[தொகு] உசாத்துணை

  • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்