இறோம் சானு சர்மிளா
| இறோம் சானு சர்மிளா | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 14, 1972 கொங்பால், இம்பாலா, மணிப்பூர், இந்தியா |
| பணி | மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர் |
| பெற்றோர் | இறோம் சி நந்தா (தந்தை) இறோம் ஓங்பி சக்தி (தாய்) |
இறோம் சானு சர்மிளா அல்லது இரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர்[1]. இவர் நவம்பர் 2, 2000ஆம் நாளிலிருந்து மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார்[2]. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்[3].
உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு [தொகு]
நவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர். [4][5] இந்த நிகழ்வு பின்னாளில் "மலோம் படுகொலை" என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படிகின்றது.[6] 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.[5]
நான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார்.[7]அவரது உடன்பிறப்பு இறோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.[8] போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும். [4] சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.[4][7]
உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். [8] அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக, மூக்கு குழாய் வழியே உணவு வழங்கத் துவங்கினர்.[9] இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து இறோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.[8][10]
மேற்கோள் [தொகு]
- ↑ Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.
- ↑ "Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.
- ↑ Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.
- ↑ 4.0 4.1 4.2 Nilanjana S. Roy (8 February 2011). "Torchbearers for Victims in a Violent Land". New York Times. பார்த்த நாள் 8 May 2011.
- ↑ 5.0 5.1 Rahul Pathak (6 August 2004). "Why Malom is a big reason for Manipur anger against Army Act". IndianExpress.com. பார்த்த நாள் 8 May 2011.
- ↑ Malom Massacre
- ↑ 7.0 7.1 Shoma Chaudhury (5 December 2009). "Irom And The Iron In India’s Soul". Tehelka. பார்த்த நாள் 8 May 2011.
- ↑ 8.0 8.1 8.2 "Manipur fasting woman re-arrested". BBC News (9 March 2009). பார்த்த நாள் 8 May 2011.
- ↑ Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. பார்த்த நாள் 8 May 2011.
- ↑ Section 309 in The Indian Penal Code, 1860
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Irom Chanu Sharmila தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- SHARMILA A SYMBOL OF PEACE AND AHIMSA
- An interview and detailed report on Irom Sharmila- A living Gandhi from North East
- Babloo Loitongbam, North-east India Experience
- A write-up on Irom Sharmila, with video clips, IMOW
- My Body My Weapon, a short documentary on Irom Sharmila by Kavita Joshi
- Irom's Iron in the Soul, an interview with Irom Sharmila
- The Unlikely Outlaw, cover story on Irom Sharmila
- Daughter of peace, cover story on Irom Sharmila
- Enacting The Irom Legacy