இரும்பு ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு ஒப்பந்தம்
நட்பு மற்றும் ஜெர்மனி மற்றும் இத்தாலி இடையே கூட்டணி உடன்பாடு
பேர்லினில் Reichskanzlei உள்ள இரும்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்காக: அடால்ப் ஹிட்லர், இத்தாலி வெளியுறவு அமைச்சர் கவுண்ட் Ciano, ரீய்ச்சின் வெளியுறவு அமைச்சர் ஜோசிம் வான் ரிப்பென்றோப் போன்றோர் உள்ளனர்.
கையெழுத்திட்டதுமே மாதம், 22, 1939
இடம்பெர்லின், செருமனி
கையெழுத்திட்டோர்செருமனி செருமனி
இத்தாலி இத்தாலி(1861–1946)
மொழிகள்செருமனி, இத்தாலியன்
முழு உரை
இரும்பு ஒப்பந்தம் விக்கிமூலத்தில் முழு உரை

இரும்பு ஒப்பந்தம் (Pact of Steel) என்பது இரண்டாம் உலக உத்தத்தின் போது ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகள் தங்களின் ராணுவ நடவடிக்கைக்கையின் ஆதாயத்திற்காகவே போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.

காலம்[தொகு]

இரும்பு ஒப்பந்தம் நடந்தது மே மாதம், 22, 1939ம் ஆண்டு காலகட்டம் ஆகும்.

நிகழ்வு[தொகு]

தனது நாட்டில் வாளும் மக்களில் கம்முனிஸ்ட்களை எதிரிகளாகவும், ஜனநாயகத்திற்கும் முரணான கருத்துக்களைக்கொண்டவர்களாகயும் பாவித்த ஹிட்லர் ஒருகாலகட்டத்தில் யூதர்களை ஆயிரம் ஆயிரம் அளவில் கொன்று குவித்து தனது வெறுப்பை உலக மக்களுக்கு தெரிவித்தார். 1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்காவின் அவாய் தீவில் அமைந்துள்ள முத்து துறைமுகத்தை சப்பான் தனது போர் விமானங்களால் தாக்குதல் நடத்தியதாலும், அதுபோல் தனது நாட்டின் மன்னரே இந்த உலகத்தின் கடவுள் என ஜப்பான் மக்களும் ஆட்சியாளர்களும் எண்ணினார்கள். 1936 ல், ஜெர்மனி மற்றும் இத்தாலி இராணுவ கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதின் மூலம் பெர்லின்-ரோம் போன்ற இரண்டு அச்சு சக்திகள் உருவாக்கப்பட்டது. இத்தாலிய பாசிச தலைவரான பெனிட்டோ முசோலினி செப்டம்பர் 1937 இல் ஜெர்மனிக்கு சென்று வந்ததை வைத்து சுட்டிக்காட்டுகிறார்கள். இத்தாலியின் முசோலினி ஹிட்லரின் கைப்பாவையாக ஆடினார். கிட்லர் சொல்லே வேதவாக்காக நம்பினார். இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தத்தை மூன்று நாடுகளும் சேர்ந்து தங்களுக்குத்தானே முடிவு செய்து கையெழுத்திட்டுக்கொண்டன.

மீறல்[தொகு]

ஜப்பான் தனது ராணுவ துருப்புக்களை பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளை பிடிப்பதற்காக கையாண்ட விதத்தினாலும், ஜரோப்பா பகுதியில் ஜெர்மனி ஜப்பானிடம் சொல்லாமலே தன் அருகில் உள்ள நாடுகளான ஆஸ்திரியா செக்கோஸ்லேவியா, போலந்து, பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டதின் மூலம் இரும்பு ஒப்பந்தத்தை மீறினார்கள். ஜப்பானும், செர்மனியும் வெற்றிபெற்றன. ஆனால் இத்தாலியின் சர்வாதிகாரியன முசொலினி மட்டும் எகிப்து மற்றும் இத்தியோப்பியா மேல் படை எடுத்து தோழ்வியைத் தழுவினார். 1939 செப்டம்பர் 1ல் ஜெர்மனி போலந்து மீது படையெடுக்க தயாரானது, போர் செப்டம்பர் 3 ம் தேதி உக்கிரமடைந்தது, ஆனால் இத்தாலி முழுமையாக மோதலுக்கு தயாராகமுடியவில்லை, ஏனெனில் தென் பிரான்ஸ் மீதான படியெடுப்பால் 1940 வரை இரண்டாம் உலக போருக்கான ஆயத்தத்தை இத்தாலியால் ஏற்படுத்த முடியவில்லை.

கிட்லர்,முசோலினி மற்றும் தலைவர்கள்

முடிவு[தொகு]

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இந்த ஒப்பந்தத்தால் எந்த நன்மையும் எட்டப்படவில்லை. இதில் இணைந்த மூன்று நாடுகளும் படு தோல்வியைத்தழுவியது. 1945ல் ஆகஸ்ட் 15ல் ஜப்பான் மற்றும் அச்சு நாடுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக சரணடைந்தது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு_ஒப்பந்தம்&oldid=3650739" இலிருந்து மீள்விக்கப்பட்டது