இரும்பிடர்த் தலையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரும்பிடர்த் தலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது புறநானூறு நூல் தொகுப்பில் பாடல் எண் 3 [1] ஆக அமைந்துள்ளது. அந்தப் பாடலில் இவர் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி என்பவனுக்குச் சில அறிவுரைகள் கூறியுள்ளார்.

புலவர் பெயர் விளக்கம்[தொகு]

பாண்டிய அரசன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி யானையின் 'இரும்பிடர்த் தலையிருந்து' மருந்தில் கூற்றம் என்னும் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றினான் என்று புலவர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார். புலவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் புறநானூற்றைத் தொகுத்தவர் இப்புலவருக்கு இரும்பிடர்த் தலையார் என்று பெயர் சூட்டியுள்ளார்.

செவியறிவுறூஉ என்னும் அறிவுரை[தொகு]
  • நிலம் பெயரினும் நின்சொல் பெயரல். ( உன் ஆட்சியே கைமாறுவதாயினும் சொன்னசொல் தவறாதே)
  • நின் நசை வேட்கையின் இரவலர் வருவர், அது முன்ன முகத்தின் உணர்ந்து அவர் இன்மை வன்மையைப் பெறுக. (உன்னை நயந்து பொருள் பெறும் நோக்கத்தோடு இரவலர் பலர் வருவர். அவர்களின் முகக் குறிப்பு அறிந்து அவர்களின் வறுமையை நீ போக்க வேண்டும். அவர்கள் வாய்திறந்து கேட்கும் அளவுக்கு வைத்துக்கொள்ளக்கூடாது.

வெளி இணைப்பு[தொகு]

  1. இரும்பிடர்த் தலையார் பாடல் புறநானூறு 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பிடர்த்_தலையார்&oldid=2925717" இலிருந்து மீள்விக்கப்பட்டது