இரீயூனியன் கிரியோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீயூனியன் கிரியோல்
Réunion Creole
கிரெயோல் ரேயோன்
நாடு(கள்)ரீயூனியன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (560,000 காட்டடப்பட்டது: 1987)e17
பிரெஞ்சு கிரியோல்
  • போர்பனைசு கிரியோல்கள்
    • ரீயூனியன் கிரியோல்
      Réunion Creole
மொழிக் குறியீடுகள்
ISO 639-3rcf
Linguasphere51-AAC-cf

இரீயூனியன் கிரியோல் (Réunion Creole, Reunionese Creole) என்பது இரீயூனியன் தீவில் பேசப்படும் ஒரு கிரியோல் மொழி ஆகும். இம்மொழி முக்கியமாக பிரெஞ்சு மொழியில் இருந்து தோன்றியதாகும். அதை விட மலகாசி, இந்தி, போர்த்துக்கேயம், குஜராத்தி, தமிழ் ஆகிய மொழிகளும் கலந்துள்ளன.[1]

இரீயூனியனில் பிரெஞ்சு மொழியே அதிகாரபூர்வ மொழியாகவும், பாடசாலை மொழியாகவும் உள்ளதால், இரீயூனியன் கிரியோல் மொழியின் எழுத்து வடிவம் பயன்பாட்டில் இல்லை. அண்மைக் காலங்களில் சில குழுக்கள் அகராதி, மற்றும் இலக்கண முறைமைகளை எழுத முயற்சி எடுத்த போதிலும், அதிகாரபூர்வமாக அவை வெளிவரவில்லை. ஆனாலும், ஆஸ்டெரிக்சு என்ற பிரபலமான பிரெஞ்சு வரைகதைகளின் இரண்டு நூல்கள் கிரியோல் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.[2]

இரீயூனியன் கிரியோல் மொழி நாடெங்கும் பரவலாக வீட்டு மொழியாகவும், பணி மொழியாகவும் பேசப்பட்டுகிறது. பிரெஞ்சு மொழி அதிகாரபூவ மொழியாகவும், நிருவாக மொழியாகவும் உள்ளதால், பலர் இரு மொழிகளையும் தனியாகவோ அல்லது கலந்தோ சூழ்நிலைக்கேற்ப பேசி வருகின்றனர்.

வரலாறு[தொகு]

ரீயூனியன் தீவில் மக்கள் குடியேறத் தொடங்கிய முதல் ஐம்பது ஆண்டுகளில் ரீயூனியன் கிரியோல் மொழி உருவானது.[1] இத்தீவில் வாழ்ந்த பெரும்பாலானோர் பிரெஞ்சு, மலகாசி, அல்லது இந்தோ-போர்த்துக்கீசராக இருந்தனர்.[1] இக்காலத்தில் அனேகமான குடும்பங்களில் ஒருவராவது பிரெஞ்சு மொழியை முதல் மொழியாகப் பேசுபவராக இருந்தார்.[3] கிரியோல் மொழி தற்போது இத்தீவின் 90% மக்களின் வீட்டு மொழியாக உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Chaudenson, Robert (1974). Le lexique du parler créole de La Réunion. பாரிஸ். 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
  3. Holm, John. Pidgins and Creoles. Volume II: Reference Survey. Cambridge: Cambridge University Press, 1989.
  4. http://www.insee.fr/fr/themes/document.asp?reg_id=24&ref_id=16941
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீயூனியன்_கிரியோல்&oldid=3544272" இலிருந்து மீள்விக்கப்பட்டது