இரா. சு. மனோகர்
| இராமசாமி சுப்ரமணிய மனோகர் | |
|---|---|
![]() |
|
| பிறப்பு | லட்சுமி நாராயணன்[1] 29 ஜூன் 1925 நாமக்கல், தமிழ் நாடு |
| இறப்பு | சனவரி 10 2006 (அகவை 80) சென்னை |
| பணி | நடிகர் |
| வாழ்க்கைத் துணை | சீதாலட்சுமி மனோகர் |
இரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
பொருளடக்கம் |
இளமைக்காலம் [தொகு]
இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.
குறிப்பிட்ட சில திரைப்படங்கள் [தொகு]
- வண்ணக்கிளி
- கைதி கண்ணாயிரம்
- வல்லவனுக்கு வல்லவன்
- வல்லவன் ஒருவன்
- இரு வல்லவர்கள்
- ஆயிரத்தில் ஒருவன்
- உலகம் சுற்றும் வாலிபன்
- பல்லாண்டு வாழ்க
- அடிமைப் பெண்
- காவல்காரன்
- இதயக்கனி
- அதிசய பெண்
நாடகங்கள் [தொகு]
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
விருதுகள் [தொகு]
இசைப்பேரறிஞர் விருது, 1987
