இரா. குணசீலன்
முனைவர்.இரா. குணசீலன் ஒரு தமிழ் ஆய்வாளர் மற்றும் இலக்கிய வலைப்பதிவாளர் ஆவார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்லல் என்னும் கிராமத்தில் மு.இராசேந்திரன், இரா.இராமேஸ்வரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். காரைக்குடியில் உள்ள இராமசாமித் தமிழ்க்கல்லூரியில் தம் இளங்கலை பி.லிட் பட்டத்தை முடித்தார் அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றார். சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். வலைப்பதிவுகளில் சங்க இலக்கியம் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது கட்டுரைகள் பல இணையதளங்களில் வெளிவந்துள்ளன.
[தொகு] பணி
கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக 01.06.2007 முதல் பணிபுரிந்துவருகிறார்.
[தொகு] பதிப்புப் பணி
1.செவ்வியல் மொழி, இலக்கியம், இலக்கணம் (பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை).
2. நாட்டுப்புற மண்ணும் மரபும் மக்களும் (தேசியக் கருத்தரங்க ஆய்வுக்கோவை)
[தொகு] விருதுகள்
தமிழ்மணம் இணையதளம் ஆண்டுதோறும் நடத்தும் வலைப்பதிவுக்கான விருதுகள் தேர்வில், 2009 ஆம் ஆண்டு இவரது “டமிலன் என்றொரு அடிமை“ என்ற கட்டுரைக்காக “தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்“ என்ற பிரிவில் இவருக்கு முதல் பரிசும், விருதும் கிடைத்தது.
