இராயப்பு யோசப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராயப்பு யோசப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அதி வணக்கத்துக்குரிய
இராயப்பு யோசப்
மன்னார் ஆயர்
சபை கத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம் கொழும்பு
மறைமாவட்டம் மன்னார்
ஆட்சி துவக்கம் 1992
முன்னிருந்தவர் தோமசு சௌந்தரநாயகம்
பிற தகவல்கள்
பிறப்பு ஏப்ரல் 4, 1940(1940-04-04)
நெடுந்தீவு, இலங்கை
குடியுரிமை இலங்கைத் தமிழர்
இல்லம் மன்னார்
படித்த இடம் பரப்புரைக் கல்லூரி, உரோம்

வண இராயப்பு யோசப் (Rayappu Joseph, பிறப்பு: 16 ஏப்ரல் 1940[1]) இலங்கையின் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஆவார்.[2][3][4]

இராயப்பு ஜோசப் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை ஒரு சுதேச வைத்தியர். தனது ஆரம்பக் கல்வியை நெடுந்தீவிலும் முருங்கனிலும் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் பயின்றார். 14வது அகவையில் யாழ்ப்பாணத்தில் தேசிய செமினறியில் இணைந்து சமயக் கல்வியைத் தொடர்ந்தார். 27வது அகவையில் குரு பட்டமும் பெற்றார்.

1967 இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்தவர் 1971 இல் முருங்கன் உதவி பாதிரியாராக (pastor) ஆனார். 1984 ஆம் ஆண்டில் ரோமில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறைச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1992 இல் மன்னார் ஆயராக நியமனம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bishop Rayappu Joseph - - Catholic Hierarchy
  2. Mannar Bisphop
  3. Sri Lanka row over Catholic letter on human rights-BBC
  4. Sri Lanka's war panel arouses strong emotions-BBC

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இராயப்பு_யோசப்&oldid=1702373" இருந்து மீள்விக்கப்பட்டது