இராயப்பு யோசப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இராயப்பு ஜோசப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வண இராயப்பு யோசப் (Rayappu Joseph, பிறப்பு: 16 ஏப்ரல் 1940[1]) இலங்கையின் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர்.[2][3][4]

இராயப்பு ஜோசப் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை ஒரு சுதேச வைத்தியர். தனது ஆரம்பக் கல்வியை நெடுந்தீவிலும் முருங்கனிலும் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் பயின்றார். 14வது அகவையில் யாழ்ப்பாணத்தில் தேசிய செமினறியில் இணைந்து சமயக் கல்வியைத் தொடர்ந்தார். 27வது அகவையில் குரு பட்டமும் பெற்றார்.

1967 இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்தவர் 1971 இல் முருங்கன் உதவி பாதிரியாராக (pastor) ஆனார். 1984 ஆம் ஆண்டில் ரோமில் உள்ள Pontifical Urban University இல் Canon Law என்ற துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். 1992 இல் மன்னார் ஆயராக நியமனம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bishop Rayappu Joseph - - Catholic Hierarchy
  2. Mannar Bisphop
  3. Sri Lanka row over Catholic letter on human rights-BBC
  4. Sri Lanka's war panel arouses strong emotions-BBC

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இராயப்பு_யோசப்&oldid=1529769" இருந்து மீள்விக்கப்பட்டது