இராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 21, 1949 ல் இராஜஸ்தான் உயர் நீதிமன்ற அவசர சட்டம், 1949 ன்படி அமைக்கப்பட்டது. இது இராஜஸ்தான் தலைநகரமான ஜோத்பூரில் அமைந்துள்ளது. இதன் நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆகும்.
இந்நீதிமன்றம் மாகாராஜா சவாய் மான் சிங்கால் 1949 ல் ஜோத்பூரில் துவக்கி வைக்கப்பட்டது. அத்ன பிறகு அதன் அமர்வுகள் ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டது அதன் பிறகு 1958 ல் கலைக்கப்பட்டு மீண்டும் 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பணியாற்ற நீதிபதிகளின் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை 40 பணியாற்றுவதோ 36 நீதிபதிகள்[சான்று தேவை] மட்டுமே. தற்பொழுதய தலைமை நீதீபதியின் பெயர் நீதியரசர் நாராயண் ராய்.