இரப்பர் குழாய் வெப்பொட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரு சக்கர வாகனம் ஒன்றின் உருளிப்பட்டை கழற்றப்படுதல்
இருசக்கர வாகனத்தில் கழற்றப்பட்ட இரப்பர் குழாயில் துளை ஏற்பட்டுள்ளதா என சோதனை செய்தல்

இரப்பர் குழாய் வெப்பொட்டல் என்பது வெப்பத்தின் வழியாக இரப்பர் போன்ற பொருட்களை ஒட்ட வைக்கும் ஒரு முறையாகும். இம்முறை அதிகமாக வாகனங்களின் சக்கரங்களில் மாட்டப்பட்டுள்ள உருளிப்பட்டை (Tyre) உள்ளே காற்றடைக்கப்பட்ட இரப்பர் குழாயில் ஏதாவது துளை ஏற்பட்டு விட்டால் அதன் வழியாகக் காற்று வெளியேறி விடுகிறது. இதனால் அந்த சக்கரம் நகர முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அந்த இரப்பர் குழாயினைக் கழற்றி அதில் ஏற்பட்டிருக்கும் துளையைக் கண்டுபிடித்து அதை அடைக்க வெப்பொட்டல் அதிக அளவாகப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இரப்பரினால் செய்யப்பட்ட சில பொருட்களில் ஏற்பட்டுள்ள குறைபாட்டைச் சரி செய்யவும் பயன்படுகிறது.