இரத்தக் கொழுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரத்தக் கொழுப்பில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை பெரும்பாலும் ‘தீய’ கொழுப்பு எனக் குறிப்பிடப்படுகிற குறையடர்த்தி கொழுமியப்புரதம் (LDL). ‘நன்மை புரியும்’ கொழுப்பு என அறியப்படும் உயரடர்த்தி கொழுமியப்புரதம் (HDL)), கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடுகள்.

குறையடர்த்தி கொழுமியப்புரதம் தமனிச் சுவர்களில் கொழுப்புச் படிவத்தை படியச் செய்கிறது. அதே சமயம் [உயரடர்த்தி கொழுமியப்புரதம் தமனி, நாடிகளை சுத்தப்படுத்த உதவுகிறது. டிரைகிளிசரைடு எனப்படும் இரத்தக் கொழுப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒன்று. ஆனால் அதிக டிரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பு பெண்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கலாம். அதிக உடற் பருமன் அதிகமாக மது அருந்துதல் நீரிழிவு உள்ளவர்களுக்கு டிரைகிளிசரைடுடன் இரத்த அளவு அதிகமாக இருக்கலாம். இவர்களுக்கு இருதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகம். ஆகவே, இவர்கள் வாழ்க்கை முறையை மாற்றி சுகவாழ்வு வாழ்வது அவசியம். உயர் இரத்தக் கொலஸ்டிரால் நாடிகளை சுருங்கச் செய்வதுடன் இருதய நோய் மற்றும் பாரிசவாதத்திற்கான ஆபத்தையும் அதிகரிக்கும். உணவு முறையில் மற்றும்/அல்லது மருந்தில் செய்யப்படும் மாற்றங்கள் இரத்தத்தில் அதிகரித்த நிலையில் உள்ள கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தக்_கொழுப்பு&oldid=1739985" இலிருந்து மீள்விக்கப்பட்டது