இரத்தக்கழிசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) சீதபேதி கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
இரத்தக்கழிசல்
Dysentery

வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ICD-10 A03.9, A06.0, A07.9
ICD-9 004, 007.9, 009.0
MeSH D004403

இரத்தக்கழிசல் (Dysentery அல்லது Bloodyflux) உடலின் குடல் பகுதியில், முக்கியமாக பெருங்குடலில், ஏற்படும் ஓர் அழற்சி நோயாகும். இதனால் காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன்[1] மலத்தில் சளி மற்றும்/அல்லது குருதியுடன் கூடிய கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும்.[2] இதற்கு தகுந்த சிகிட்சை அளிக்கப்படாதிருந்தால் மரணமும் நேரிடலாம்.

[தொகு] அறிகுறிகள்

பொதுவாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் இது மிதமானதோர் நோயாக உள்ளது; மென்மையான வயிற்றுவலியுடன் அடிக்கடி மலம் போவதுடன் நின்று விடுகிறது. ஒன்று முதல் மூன்று நாட்கள் கழித்து அறிகுறிகள் காணப்படுகின்றன; ஒரு வாரத்தில் இவை மறைந்து விடுகின்றன.

எத்தனைமுறை மலம் போக உந்தப்படுகிறது, மலத்தின் அளவு, மலத்தில் சளி மற்றும்/அல்லது குருதியின் இருப்பு என்பவை அழற்சிக்குக் காரணமான நோய்க்கிருமியை சார்ந்திருப்பவை. முலைப்பால் வெல்லம் தாளாமை தற்காலிகமாக நிகழலாம், சிலநேரங்களில் கடுமையான நோய்த்தாக்கத்தில் இது பல்லாண்டுகள் தொடரவும் கூடும். சில மிகக்கடுமையான தாக்கங்களில் குருதியுடன் வாந்தி எடுத்தல், கடுமையான வயிற்று வலி, காய்ச்சல், அதிர்ச்சி, மற்றும் சன்னி ஆகிய அறிகுறிகளும் காணப்படும்.[3][4][5][6]

[தொகு] மேற்கோள்கள்

  1. Traveller's Diarrhoea: Dysentery ISBN 0-86318-864-8 p. 214
  2. dysentery at Dorland's Medical Dictionary
  3. DuPont HL (1978). "Interventions in diarrhoeas of infants and young children". J. Am. Vet. Med. Assoc. 173 (5 Pt 2): 649–53. PMID 359524. 
  4. DeWitt TG (1989). "Acute diarrhoea in children". Pediatr Rev 11 (1): 6–13. doi:10.1542/pir.11-1-6. PMID 2664748. 
  5. "Dysentery symptoms". National Health Service. பார்த்த நாள் 2010-01-22.
  6. "Bacillary dysentery". Dorlands Medical Dictionary. பார்த்த நாள் 2010-01-22.
"http://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தக்கழிசல்&oldid=1115160" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்