இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு (2G spectrum scam) என இரண்டாம் தலைமுறை தொழில்நுட்ப நகர்பேசி சேவை நிறுவிட நகர்பேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்க இந்திய அரசு அலுவலர்கள் சட்டத்திற்குப் புறம்பாக குறைவான கட்டணம் வசூலித்ததாக எழுந்துள்ள விதிமீறல்கள் குறிப்பிடப்படுகின்றன. இதனை அடுத்து நடந்த மூன்றாம் தலைமுறை உரிமங்களுக்கு ஏலமுறையில் கட்டணம் வசூலித்ததை ஒப்பிட்டு முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியின் ஆய்வு அரசுக்கு ரூ.1,76,379 கோடிகள் ($ 39 பில்லியன்) நட்டம் ஏற்பட்டுள்ளதாக்க் கூறுகிறது. இந்த உரிமங்கள் 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டபோதும் இந்த கணக்கு ஆய்வின் அறிக்கையாலும் இந்திய வருமானவரித்துறை ஒட்டுக்கேட்ட நீரா ராடியா ஒலிநாடாக்களின் பொதுவெளி கசிவாலும் இது 2010ஆம் ஆண்டு இறுதியில் கவனம் பெற்றது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் இந்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா பதவி விலகினார்.
இது குறித்த அரசின் புலனாய்வு, புலனாய்ந்து பெற்ற தரவுகள் குறித்த அரசின் செயற்பாடு போன்றவை விவாதிக்கப்படுகின்றன. ஆளும் கூட்டணிக்கும் எதிர்கட்சிகளுக்கும் புலனாயும் முறை குறித்த கருத்துவேற்றுமையால் இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து 23 நாட்கள் இயங்காது அவை முடக்கப்பட்டது [1]. இந்திய ஊடகங்களின் ஈடுபாடும் எதிர்வினைகளும் பக்கச்சார்புடன் உள்ளமையும் உரையாடப்படுகிறது.
உச்சநீதி மன்றம் இம்முறைகேடுகள் குறித்த மத்தியப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகளை நேரடியாக கண்காணிக்க தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவும் முறைகேடுகளை ஆராய்ந்து வருகிறது.தவிர தொலைதொடர்புத்துறை இந்த உரிமங்கள் வழங்குவதில் 2001ஆம் ஆண்டு முதலே உரிய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி உள்ளதா என ஆராய நீதியரசர் சிவ்ராஜ் பாட்டீல் தலைமையில் தனிநபர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] அரசியல்வாதிகள்
[தொகு] திமுக - ராசா
இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சராக இருந்த ராசாவை (திமுக) மீது இந்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டி 60 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்திருந்தது. ஏப்பிரல் 3, 2011 அன்று இவருக்கு எதிராக 80,000 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.[2] இவரும் திமுகவின் பல முக்கிய உறுப்பினர்களும் இந்த முறைக்கேட்டில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
[தொகு] திமுக - கனிமொழி
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் இந்த முறைக்கேட்டில் முக்கிய பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.[3] ஏப்ரல் 25, 2011 அன்று சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11-ன் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.[4]. கைது செய்வதைத் தவிர்க்க இவர் முறையிட்ட ஜாமீன் மனு மே 6, 2011 அன்று பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு மே 14 அன்று தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பு மே 20, 2011 அன்று அவரது ஜாமீன் தள்ளுபடி செய்து கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.[5]
[தொகு] மற்றவர்கள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ இகனாமிக்சு டைம்சு செய்தி:நாடாளுமன்ற முடக்கத்தால் 146 கோடி இழப்பு
- ↑ CBI files 80,000-pg chargesheet: But for Raja, silent on DMK
- ↑ 2G scam: Kanimozhi only a suspect for now, says CBI
- ↑ 2ஜி அலைக்கற்றை வழக்கு: கனிமொழி கூட்டு சதியாளர்- சிபிஐ குற்றப்பத்திரிகை - தினமலர் செய்தி
- ↑ http://www.ndtv.com/article/india/2g-scam-no-bail-for-kanimozhi-court-orders-immediate-arrest-107166
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Dayanidhi-Maran-likely-to-be-dropped-in-next-Cabinet-reshuffle/articleshow/8991552.cms Dayanidhi Maran: 2g Scam
- ↑ http://indiatoday.intoday.in/site/story/2g-scam-chidambaram-as-guilty-as-raja-claims-subramanian-swamy/1/141805.html 2G scam: Chidambaram as guilty as Raja, claims Subramanian Swamy
- ↑ http://www.hindustantimes.com/2G-spectrum-scam-Anil-Ambani-is-now-a-suspect/Article1-663738.aspx
- ↑ "Government, 11 telecom firms get court notice on 2G spectrum". Sify.com. பார்த்த நாள் 2011-02-11.