இரசம் (உணவு)
இரசம் என்பது உணவாக தயாரித்து உண்ணப்படும் திரவமாகும். உணவுண்பதற்குச் சற்று முன்னோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ உட்கொள்ளப்படும். உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறவும் பொதுவாக உள்ளெடுக்கப்படும்.
புளியை நீரில் கரைத்து, உப்பு மற்றும் ரசப்பொடி சேர்த்து, கொதிக்க வைத்த உணவுப்பொருள் புளி ரசம் எனப்படும். இது தமிழகத்தில் பிரபலம். பொதுவாக தமிழரின் மதிய உணவில் சாதத்துடன் முதலில் குழம்பு, பிறகு ரசம், கடைசியில் தயிர் என்ற வரிசையில் பரிமாறப்படும்.
பொருளடக்கம் |
ரச வகைகள் [தொகு]
- மிளகு ரசம்
- சீரக ரசம்
- பருப்பு ரசம்
- பருப்புருண்டை ரசம்,
- மைசூர் ரசம்(தேங்காய் அல்லது கொப்பரை அறைத்து)
- திப்பிலி ரசம்
- எலுமிச்சை ரசம்
- அண்ணச்சிப் பழ புளி ரசம்
- தக்காளி ரசம் (குரைவான் புளியுடன்),
- வேப்பம்பூ ரசம்,
- அள்ளி பருப்பு ரசம் (முக்கால் வெந்த பருப்பு இருக்கும்).
மிளகாத் தண்ணி [தொகு]
முல்லிகாடனி (Mulligatawny) என்று ஆங்கிலோஇந்தியரால் பரப்பப்பட்டுள்ள ஓர் தமிழக இரச வகையாகும்.[1]
மிளகுத் தண்ணீர் என்பதே மருவி ஆங்கிலத்தில் முல்லிகாடனி என்று வழங்கப்படலாயிற்று.[2]
இதனைத் தயாரிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.[3] மேற்கு நாடுகளில், இது சற்றே மஞ்சளாக கோழிக்கறித்துண்டுகள், இறைச்சித் துண்டுகள் போடப்பட்டு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது அரிசி மாவு கொண்டு அடர்த்தி கூடுதலாக்கப்படுகிறது.
மற்ற பெயர்கள் [தொகு]
சாற்றும் அமுது என்றும் ரசத்துக்கு ஒரு பெயருண்டு. சுருக்கமாக் சாத்துமது என சொல்வார்.
ஈயப்பாத்திரம் [தொகு]
ஈயப்பாத்திரத்தில் சமைத்த ரசம் அதிக சுவையாக இருக்கும். சமைக்கும் பொழுதே அதிகமாக மணக்கும்.
தயாரிப்பு முறை [தொகு]
செத்தல் மிளகாய், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், நற்சீரகம், பழப்புளி, உப்பு, உள்ளி, தேங்காய்ப்பால், செத்தல் மிளகாய், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், நற்சீரகம், உள்ளி என்பவற்றை குற்றலாகப் பொடி செய்வர். தேங்காய்ப்பால் செறிவு குறைந்த தண்ணீர்ப்பாலாக எடுக்கப்பட்டு அதில்பொடி செய்யப்பட்ட பதார்த்தங்களை இட்டு கொதிக்க விடுவர். தேவைக்கு ஏற்ப பழப்புளி,உப்பு இடுவர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Southall, Helen (1990). Good Housekeeping: The New Cookery Encyclopedia. London: Ebury Press. pp. 289.
- ↑ Hess, Karen; Weir, Robert M.; Stoney, Samuel G. (1998). The Carolina Rice Kitchen: The African Connection. Univ of South Carolina Press.
- ↑ Sahni, Julie (2001). Indian Regional Classics. Ten Speed Press. pp. 23.