இயேசு (பெயர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசு
ஒலிப்பு/ˈdʒiːzəs/
பாலினம்ஆண்

இயேசு என்று தமிழில் பாவிக்கப்படும் பெயர்ச்சொல்லானது, கிரேக்கப் பெயரான செசேஸ் (Ἰησοῦς: Iēsous) என்பதன் இலத்தீன் வடிவமும் ஆங்கில மொழியில் "Jesus" (/[invalid input: 'icon']ˈzəs/) எனவும் பாவிக்கப்படுகிறது. இது எபிரேய யேசுவா (ישוע) எனும் சொல்லின் மொழிபெயர்ப்பு. இது யோசுவா அல்லது யேஸ்சுவா எனவும் அழைக்கப்படும்.[1][2] சமயம் பற்றிய பார்வையில் இப் பெயர் கிறிஸ்தவத்தின் மையமான இயேசுவைக் குறிக்கிறது.

இயேசு என்னும் பெயர் எசுபானிய கிறிஸ்தவ வட்டத்தில் ஆண்களுக்குச் சூட்டப்படும் ஒரு பிரசித்தி பெற்ற பெயராகும்.[3]

சொல்லிலக்கணம்[தொகு]

புதிய ஏற்பாட்டில் இயேசு என்று பாவிக்கப்படும் சொல் இலத்தீன் வடிவ கிரேக்கப் பெயர் செசேஸ் (Ἰησοῦς: Iēsous) என்பதாகும். இது எபிரேய யேசுவா (ישוע) எனும் சொல்லின் மொழிபெயர்ப்பு. இது யோசுவா அல்லது யேஸ்சுவா எனவும் அழைக்கப்படும்.[1][2] இப்பெயரிலுள்ள எபிரேய வினைச் சொல்லாகிய "யேஸ்" (விடுவி எனும் அர்த்தம்) மற்றும் எபிரேய பெயர்ச் சொல்லாகிய "யேசுவா" (விடுவிப்பவர்/மீட்பர்) எனும் அர்த்தத்துடன் தொடர்புபட்டது.[4]

இவற்றையும் வாசிக்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Liddell and Scott. A Greek–English Lexicon, p. 824.
  2. 2.0 2.1 Catholic encyclopedia: Origin of the name Jesus Christ
  3. Jesus in the Hispanic community by Harold Joseph Recinos 2010 ISBN 978-0-664-23428-7 page 112
  4. Brown Driver Briggs Hebrew and English Lexicon; Hendrickson Publishers 1996 ISBN 1-56563-206-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசு_(பெயர்)&oldid=3437518" இலிருந்து மீள்விக்கப்பட்டது