இயற்பியல் பண்பளவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் இயல்புகளையும் பண்புகளையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. Q என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {Q} என்னும் ஓர் எண்ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.
-
- Q = {Q} x [Q]
(இன்று SI அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( physical dimension) என்னும் கருத்தை முதலில் 1822ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.