இமாமியா மாணவர் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமாமியா மாணவர் இயக்கத்தின் கொடி

இமாமியா மாணவர் இயக்கம் (Imamia Students Organization, உருது: امامیہ اسٹوڈنٹس آرگنائزیشن پاکستان) பாகிஸ்தான் நாட்டின் ஷியா பிரிவு மாணவர்களின் அமைப்பாகும். இதைச் சுருக்கமாக ஐ.எஸ்.ஓ (I.S.O) என அழைப்பர். இந்த அமைப்பு முகம்மது அலி நக்வி என்பவரால் 1972 ஆம் ஆண்டு மே மாதம் லாகூர், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (University of Engineering and Technology, Lahore.)தொடங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டின் நிலவரப்படி இவ்வமைப்பு பாகிஸ்தான் முழுமைக்கும் பரவியுள்ளது. மேலும் கிராமப்புறங்கள், ஆசாத் ஜம்மு, காஸ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தான் பகுதிகளிலும் பரவியுள்ளது. இதற்கு 1200 கிளை நிலையங்கள் அமைந்துள்ளன.[1]

நோக்கம்[தொகு]

இந்த அமைப்பின் நோக்கம் இளம் தலைமுறையினருக்கு குரானையும், முகமது நபியின் போதனைகலையும் சொல்லிக் கொடுப்பது ஆகும். இதன் மூலம் இளம் மாணவர்கள் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாகுவார்கள். மேலும் இஸ்லாம் பாகிஸ்தானுக்கான கடவுளின் கொடை என்பதைப் புரிய வைப்பதும் ஆகும்.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாமியா_மாணவர்_இயக்கம்&oldid=3792537" இலிருந்து மீள்விக்கப்பட்டது