இப்னு சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இபின் சீனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரசீக அறிஞர்
பெயர்: அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா
பதவி: Sharaf al-Mulk, Hujjat al-Haq, Sheikh al-Rayees
பிறப்பு: approximately 980 CE / 370 AH
இறப்பு: 1037 CE / 428 AH
இனம்: பாரசீகர்
பகுதி: மத்திய ஆசியா மற்றும் பாரசீகம்
Maddhab: Twelver ஷியா முஸ்லிம்[1]
மரபு: அவிசின்னியம்[2]
முதன்மை ஆர்வம்: இஸ்லாமிய மருத்துவம், இஸ்லாத்தில் alchemy மற்றும் வேதியியல், இஸ்லாமிய வானியல், இஸ்லாமிய நெறிமுறைகள், தொடக்க இஸ்லாமிய மெய்யியல், இஸ்லாமிய ஆய்வுகள், இஸ்லாமிய மெய்யியலில் தருக்கம், இஸ்லாமியப் புவியியல், இஸ்லாமியக் கணிதம், இஸ்லாமிய உளவியல் சிந்தனை, இஸ்லாமிய இயற்பியல், அரபிக் கவிதை, பாரசீகக் கவிதை, இஸ்லாமிய அறிவியல், Kalam, தொல்லுயிரியலாளர்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கரு:
நவீன மருத்துவத்தின் தந்தை, அவிசென்னியம் மற்றும் அவிசென்னியத் தருக்கத்தின் நிறுவனர், உளப்பகுப்பாய்வின் முன்னோடி, pioneer of aromatherapy and neuropsychiatry, நிலவியலில் முக்கிய பங்களிப்பு.
ஆக்கங்கள்: The Canon of Medicine
The Book of Healing
செல்வாக்கு: ஹிப்போகிரட்டீஸ், சுஷ்ருதா, சாரகா, அரிஸ்ட்டாட்டில், காலென், பிளாட்டினஸ், நியோபிளேட்டோனியம், இந்தியக் கணிதம், முஹம்மத், ஜபார் அல்-சாதிக், வாசில் இபின் அத்தா, அல்-கிண்டி, அல்-பராபி, அல்-ராசி, அல்-பிரூனி, முஸ்லிம் மருத்துவர்கள்
செல்வாக்குக்கு
உட்பட்டோர்:
Abū Rayhān al-Bīrūnī, ஓமர் கய்யாம், அல்காசெல், அபூபக்கர், அவெரோஸ், நாசிர் அல்-டின் அல்-Tūsī, இபின் அல்-நாபிஸ், அவெரோயிசம், Scholasticism, ஆல்பர்ட்டஸ் மக்னஸ், டுன்ஸ் ஸ்லோட்டஸ், தாமஸ் அக்குவைனாஸ், ஜான் புரிடான், கியம்பட்டிஸ்டா பெனடெட்டி, கலிலியோ கலிலி, வில்லியம் ஹார்வி, ரேனே டெஸ்கார்ட்டஸ், ஸ்பினோசா

இபின் சீனா அல்லது அவிசென்னா எனச் சுருக்கமாக அழைக்கப்படும், அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா (கிபி 980 - கிபி 1037) பாரசீகத்தைச் சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், தருக்கம், தொல்லுயிரியல், கணிதம், இயற்பியல், கவிதை, உளவியல், அறிவியல் போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.

இபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் 15 நூல்கள் மெய்யியல் சார்ந்தவை, 40 மருத்துவ நூல்கள். இவருடைய ஆக்கங்களில் மிகவும் புகழ் பெற்றது, குணப்படுத்தல் நூல் (The Book of Healing) என்னும் நூலாகும். இது ஒரு மெய்யியல் மற்றும் அறிவியல் கலைக்களஞ்சியம் ஆகும்.

இவர் முந்திய நவீன மருத்துவத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார். [3][4][5]. முக்கியமாக உடலியக்கவியல் ஆராய்ச்சியில் முறைப்படியான பரிசோதனைகளையும், அளவீடுகளையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார்.[6]. தொற்றுநோய்களைக் கண்டறிந்தும், அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும், அவற்றைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோர்பின், (1993) பக்.170
  2. கோர்பின்,(1993) பக். 174
  3. Cas Lek Cesk (1980). "The father of medicine, Avicenna, in our science and culture: Abu Ali ibn Sina (980-1037)", Becka J. 119 (1), p. 17-23.
  4. Medical Practitioners
  5. D. Craig Brater and Walter J. Daly (2000), "Clinical pharmacology in the Middle Ages: Principles that presage the 21st century", Clinical Pharmacology & Therapeutics 67 (5), p. 447-450 [448-449].
  6. Katharine Park (March 1990). "Avicenna in Renaissance Italy: The Canon and Medical Teaching in Italian Universities after 1500 by Nancy G. Siraisi", The Journal of Modern History 62 (1), p. 169-170.

    "Students of the history of medicine know him for his attempts to introduce systematic experimentation and quantification into the study of physiology".

  7. David W. Tschanz, MSPH, PhD (August 2003). "Arab Roots of European Medicine", Heart Views 4 (2).

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இப்னு_சீனா&oldid=1464993" இருந்து மீள்விக்கப்பட்டது