இன்கா படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்கா படை என்பது இன்கா பேரரசினைக் காக்கவும், அதன் எல்லையை விரிவுபடுத்தவும், எதிரிகளைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு பல் இனப் படையாகும். இன்கா பேரரசு வளர்ந்ததைப் போலவே அதன் படைபலமும் அதிகரித்தது. இன்கா பேரரசு அதன் உச்சத்தில் இருந்த போது இன்கா படையில் 2 இலட்சம் பேர் இருந்தனர்.[1][2][3]

இன்கா படையில் போர் வீரர்கள் முக்கிய இடம் வகித்தனர். இவர்களுக்கு உணவு, உடை, மற்றும் உணவு உற்பத்தி, வேளாண்மை பாதிக்கப்படாமல் இருக்க அவர்களது குடும்பங்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இன்கா படையினர் போரில் வென்று தலைநகருக்குத் திரும்புகையில் பெண்களும் குழந்தைகளும் அவர்கள் வீரத்தினைப் போற்றி மரியாதை செய்தனர்.

கருவிகள்[தொகு]

இன்கா படையினர் தாங்கள் சார்ந்திருந்த இனத்திற்கேற்ப வெவ்வேறு வகையான எளிய ஆயுதங்களைக் கையாண்டனர்.

பாதுகாப்பு[தொகு]

  • தலைக்கவசம்
  • மார்புக்கவசம்

ஆயுதங்கள்[தொகு]

  • கோடாரிகள்
  • ஈட்டிகள்
  • போலா எனப்படும் நுனியில் கற்களைக் கொண்ட கயிறு
  • கவண்வில்

மேற்கோள்கள்[தொகு]

  1. Waldemar Espinoza, Los Incas, p. 361. The Inca army would have been composed of men from Cuzco and Quito as well as coastal and forest dwellers etc.
  2. Waldemar Espinoza, Los Incas, p. 377. The Inca armies were received in Cuzco's Plaza de Armas.
  3. Sosa Freire, 1996: 27. Campaign of Huayna Capac against the rebels in the north of the empire between 1510 and 1520 approximately
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்கா_படை&oldid=3769052" இலிருந்து மீள்விக்கப்பட்டது