இனுக்ரிருற் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இனுக்டிட்டுட்
ᐃᓄᒃᑎᑐᑦ, இனுக்டிட்டுட், இனுட்டிட்டுட், Inuktitun, Inuinnaqtun, Inuttut, and other local names
 நாடுகள்: கனடா (நுனாவுட், நுனாவிக், Northwest Territories, Nunatsiavut)
 பேசுபவர்கள்: 35,000 (approx.)[1]
மொழிக் குடும்பம்: எஸ்கிமோ-அலெயுத்
 Inuit
  இனுக்டிட்டுட் 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: Nunavut, Nunavik, Northwest Territories, Nunatsiavut (Canada)
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Inuit Tapiriit Kanatami and various other local institutions.
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: iu
ISO 639-2: iku
ISO/FDIS 639-3: பலவாறு:
iku — Inuktitut (generic)
ike — Eastern Canadian Inuktitut
ikt — Western Canadian Inuktitut 

கனடாவின் நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே இனுக்ரிருற் (Inuktitut). நுனுவற்றில் வாழும் 20,000 மக்களால் இம்மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாந்திலும் (Greenland) 40,000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.

இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் மூத்த குடிமக்களின் மொழி. 1894-இல் தான் இம்மொழியின் எழுத்துருவம் உருவாக்கப்பட்டது. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி; இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம்மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள பல வகையிலும் முயன்று வருகின்றனர்.

1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. அண்மையில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையதில் இனுக்ரிருற் அகராதி உருவாகிவருகின்றது.

இனுக்ரிருற் இதழ் இம்மொழியின் முக்கிய இதழ் ஆகும். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது.

[தொகு] மேற்கோள்கள்

  1. Various Languages Spoken (147), Age Groups (17A) and Sex (3) for the Population of Canada, Provinces, Territories, Census Metropolitan Areas and Census Agglomerations, 2006 Census - 20% Sample Data and Selected Language Characteristics (165), Aboriginal Identity (8), Age Groups (7), Sex (3) and Area of Residence (6) for the Population of Canada, Provinces and Territories, 2006 Census - 20% Sample Data (Total - Aboriginal and non-Aboriginal identity population


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இனுக்ரிருற்_மொழி&oldid=1114080" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்