இந்தோனேசிய மீச்சிறு கெண்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்தோனேசிய மீச்சிறு கெண்டை ஃபேடோசைப்பிரிசு புரோச்செனட்டிக்கா(Paedocypris progenetica) |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Paedocypris progenetica Kottelat, Britz, H. H. Tan & Witte, 2006 |
இந்தோனேசிய மீச்சிறுகெண்டை அல்லது ஃபேடோசைப்பிரிசு புரோச்செனட்டிக்கா (Paedocypris progenetica) என்பது இந்தோனேசியாவில் மட்டும் காணப்படும் சைப்பிரினிடு (cyprinid) வகைக் கெண்டை மீன். இது ஒருவகை சதுப்புக்காடுகளிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றது. இதுவே உலகில் யாவற்றினும் மிகச்சிறிய மீன் இனம் ஆகும். இம்மீன் இனத்தின் பெண் மீன்களின் நீளம் 10.3 மில்லிமீட்டரும் ஆண் மீன்களின் நீளம் 7.9 மில்லிமீட்டரும் மட்டுமே ஆகும் [1]. அண்மையில், பப்புவா நியூகினியில் கண்டுபிடித்து, சனவரி 2012 இல் விளக்கப்பட்ட, குட்டித் தவளைக்கு[2]
முன்பு இந்த மீச்சிறு கெண்டை மீனே உலகின் மிகச்சிறிய முதுகெலும்பியாக இருந்தது
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ Busson, Frédéric; Froese, Rainer (15 November 2011). "Paedocypris progenetica". FishBase. பார்த்த நாள் 13 January 2012.
- ↑ "World's tiniest frogs found in Papua New Guinea". The Australian. 12 January 2012. http://www.theaustralian.com.au/news/breaking-news/worlds-tiniest-frogs-found-in-papua-new-guinea/story-fn3dxity-1226242332383. Retrieved 11 January 2012.
