இந்தோனேசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தோனீசிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தோனேசிய மொழி
Bahasa Indonesia
பஹாசா இந்தோனேசியா
 நாடுகள்: இந்தோனேசியா, கிழக்குத் திமோர் 
பகுதி: தென்கிழக்கு ஆசியா
 பேசுபவர்கள்: கிட்டத்தட்ட 200 மில்லியன் (17 மில்லியன் தாய்மொழி) 
நிலை: 52 (தாய்மொழி வரிசை)
மொழிக் குடும்பம்: ஆஸ்திரோனீசிய
 மலாய-பொலினீசிய
  கரு மலாய-பொலினீசிய
   சுண்டா-சுலவெசி
    மலாயிய
     மலாய
      உள் மலாய
       இந்தோனேசிய மொழி 
எழுத்து முறை: இலத்தீன் அரிச்சுவடி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இந்தோனேசியா
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: புசட் பஹசா
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: id
ஐ.எசு.ஓ 639-2: ind
ISO/FDIS 639-3: ind 

இந்தோனேசிய மொழி (Indonesian language) இந்தோனேசியாவின் உத்தியோகபூர்வ மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தோனேசியத் தீவுகளுக்கிடையே இடைத் தரகர் மொழியாகச் செயற்பட்டு வந்த இந்தோனேசியாவின் ரியாவு மாநிலத்தின் பேச்சு வழக்கினை ஒத்ததாகும். இந்தோனேசியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. மலாய் மொழியை ஒத்தது. 1945 இல் இந்தோனேசியா சுதந்திரம் பெற்றபோது வரையறுக்கப்பட்டுத் தனிமொழியானது. கிட்டத்தட்ட 100% இந்தோனேசியர்களால் சரளமாகப் பேசப்படக்கூடிய இம்மொழி, உலகில் அதிகளவு மக்களால் பேசப்படும் மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது.

இந்தோனேசிய மொழியில் சாவக மொழியின் செல்வாக்கு மிகைத்திருப்பதுடன் அரபு, சமஸ்கிருதம், தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட ஏராளமான வேற்று மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. இதன் இலக்கணவமைப்பு பெரும்பாலும் அரபு மொழியின் இலக்கணவமைப்பை ஒத்திருப்பதையும் காண முடிகின்றது. எனினும், இந்தோனேசிய மொழியில் பால், எண், இடம், காலம், ஒருமை-பன்மை போன்ற வேறுபாடுகள் காணப்படுவதில்லை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோனேசிய_மொழி&oldid=1371950" இருந்து மீள்விக்கப்பட்டது