இந்திரா சமரசேகர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா சமரசேகர
Indira V. Samarasekera at the World Economic Forum, Annual Meeting of the New Champions, 2009.
ஆல்பர்டா பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தர்
பதவிக்காலம்1 ஜூலை 2005 – தற்போதைய
முன்னவர்Roderick D. Fraser
பிறப்புஏப்ரல் 11, 1952 (1952-04-11) (அகவை 71)
கொழும்பு, இலங்கை
Alma materஇலங்கைப் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், டேவிஸ்
பிரித்தானிய கொலம்பியப் பல்கலைக்கழகம்

இந்திரா வசந்தி சமரசேகர, (பிறப்பு: ஏப்ரல் 11, 1952) கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஆவார். இவர் ஆல்பர்டா பல்கலைக்கழகத்தின் 12வது மற்றும் தற்போதைய தலைவரும் துணைவேந்தரும் ஆவார்.[1]. மேலும் ஆல்பர்ட்டாவின் பல்கலைக்கழகங்களிலேயே ஒரு பெண் தலைவராகியுள்ளது இதுவே முதல் முறை.

வாழ்க்கை[தொகு]

இலங்கையின் தலைநகர் கொழும்பில் பிறந்த இவர் ஓர் இலங்கைத் தமிழர் ஆவார். இவர், 1974 ஆம் ஆண்டு, தன் இளநிலை இயந்திரப் பொறியியலை இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், 1976 ஆம் ஆண்டு மேற்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பயின்றார். பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து, 1980 ஆம் ஆண்டில் பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-10-24. பார்க்கப்பட்ட நாள் 2012-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_சமரசேகர&oldid=3924627" இலிருந்து மீள்விக்கப்பட்டது